SELANGOR

பெரிய அளவிலான ஸ்மார்ட் நெல் திட்டம் - விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம்

4 ஜனவரி 2024, 8:58 AM
பெரிய அளவிலான ஸ்மார்ட் நெல் திட்டம் - விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம்

கோலாலம்பூர், ஜன 4: இந்த ஆண்டு சபா மற்றும் சரவாக் உட்பட அலா சிகிஞ்சான் பெரிய அளவிலான ஸ்மார்ட் நெல் திட்டத்தின் (ஸ்மார்ட் எஸ்பிபி) கீழ் தனது முயற்சிகளை இரட்டிப்பாக்கி நெல் சாகுபடியை விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் (KPKM) விரிவுபடுத்துகிறது.

நாடு முழுவதும் பெரிய அளவில் நெல் நடவு செய்வதன் மூலம் உள்ளூர் அரிசி தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும், குறிப்பாக காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு என அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்தார்.

விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் எஸ்பிபி அல சிகிஞ்சான் திட்டம், சிலாங்கூரில் உள்ள சிகிஞ்சான் நெல் விவசாயிகளால் நடைமுறைப்படுத்தப்படும் நல்ல விவசாய மாதிரிகள் மற்றும் நடைமுறைகளில் கவனம் செலுத்துகிறது.

நெல் விளைச்சலை அதிகரிப்பதன் மூலம் நெல் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான மேல் அதிகமாக, இரண்டு ஆண்டுகளுக்குள் நாடு இறக்குமதி செய்யப்படும் அரிசியை நம்பியிருப்பதை நிறுத்துவதற்கும் இந்த திட்டம் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

26,000 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட 10,000 நெல் விவசாயிகளை உள்ளடக்கிய ஸ்மார்ட் எஸ்பிபி அலா சிகிஞ்சான் திட்டம் தற்போது நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.

- பெர்னாமா

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.