SELANGOR

இலவசச் சமூக வாகன சேவையை 1,907 நபர்கள் பயன்படுத்தியுள்ளனர்

4 ஜனவரி 2024, 8:56 AM
இலவசச் சமூக வாகன சேவையை 1,907 நபர்கள் பயன்படுத்தியுள்ளனர்

ஷா ஆலம், ஜன 4: ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) 2015 முதல் இலவசமாக வழங்கி வரும் சமூக வாகன சேவையை மொத்தம் 1,907 நபர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

அந்த எண்ணிக்கையில் 2015ல் (91), 2016 (127), 2017 (202) மற்றும் 2018 (190) பேர் இந்த சேவையைப் பயன்படுத்தியதாகக் கார்ப்பரேட் மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, 2019 (205), 2020 (126), 2021 (13), 2022 (473) மற்றும் 2023 (480) நபர்கள் இந்த சேவையைப் பயன்படுத்தி உள்ளனர் என அசார் முகமது ஷெரீப் குறிப்பிட்டார்.

"நாங்கள் வழங்கும் சமூக வாகனத்திற்கு பொதுமக்கள் ஆதரவு மிகவும் ஊக்கமளிக்கிறது மற்றும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், சிலர் இந்த சேவையை வழங்குவதற்காக எம்பிஎஸ்ஏவை பாராட்டினர்.

"அதனைத் தொடர்ந்து இச்சேவையை நாங்கள் இந்த ஆண்டும் தொடர்வோம். இந்த சேவையை மருத்துவமனைகள் அல்லது சிகிச்சை மையங்களுக்குச் செல்ல விரும்பும் ஊனமுற்றோர் (OKU)  அடையாள அட்டை  கொண்டவர்கள் மற்றும் முதியவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்," என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

இதுவரை, எம்பிஎஸ்ஏ இரண்டு வாகன யூனிட்டுகளைக் கொண்டுள்ளது. அவை ஊனமுற்றோரின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட வேன்கள் மற்றும் முதியோருக்கான புரோட்டான் எக்ஸோரா ஆகும்.

மேலும் தகவலுக்குப் பொதுமக்கள் எம்பிஎஸ்ஏ சமூக மேம்பாட்டுத் துறையை 03-5522 2732 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

சமூக வாகன சேவை திட்டம் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும்.

சேவைகள்  வழங்கப்படும் இடங்கள்,

செக்‌ஷன் 7 மற்றும் செக்‌ஷன் 19 சுகாதார கிளினிக்குகள்

புக்கிட் குடா ஹெல்த் கிளினிக், கிள்ளான்

சுங்கை பூலோ ஹெல்த் கிளினிக்

ஷா ஆலம் பொது மருத்துவமனை

சுங்கை பூலோ பொது மருத்துவமனை

தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை

மலாயா பல்கலைக்கழக மருத்துவமனை

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.