ஷா ஆலம், ஜன 4 : ஜாலான் வாவாசான், தாமான் வாவாசான், பூச்சோங்கில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இரும்பு தடுப்புகளைப் பொருத்தும் பணி எதிர்வரும் ஜனவரி 8 ஆம் தேதிக்குள் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது கட்டமாக 200 இரும்பு தடுப்புகள் பகுதியின் இடது மற்றும் வலது புறங்களில் நிறுவப்பட்டுள்ளன என சுபாங் ஜெயா நகர சபையின் (MBSJ) மேயர் கூறினார்.
‘‘முதல் கட்டமாகக் குடியிருப்புப் பகுதியில் உள்ள மண்ணை பலப்படுத்துவதற்காக 375 இரும்பு தடுப்புகள் பொருத்தப்பட்டன.
"இப்போது 200 இரும்பு தடுப்புகளைப் பொருத்தியதன் மூலம் இரண்டாம் கட்டம் 50 சதவீதத்தைத் தாண்டியுள்ளது" என்று டத்தோ முகமட் ஃபௌசி முகமட் யாதிம் இன்று சிலாங்கூர்கினியிடம் கூறினார்.
அடுத்த நிலச்சரிவைத் தடுக்க, பூர்வாங்க மற்றும் உடனடி நடவடிக்கையாக இரும்பு தடுப்புகள் பொருத்தப்பட்டன அவர் மேலும், கூறினார்.




