SELANGOR

அனாக் பிந்தார் உதவித் திட்டத்தின் (ஆசோ பிந்தார்) 2024 அமர்வுக்கான பதிவு திறப்பு

4 ஜனவரி 2024, 5:14 AM
அனாக் பிந்தார் உதவித் திட்டத்தின் (ஆசோ பிந்தார்) 2024 அமர்வுக்கான பதிவு திறப்பு

ஷா ஆலம், ஜன 4: அனாக் பிந்தார் உதவித் திட்டத்தின் (ஆசோ பிந்தார்) 2024 அமர்வுக்கான பதிவு ஜனவரி 2 ஆம் தேதி திறக்கப் பட்டது என்று யாயாசான் வாரிசான் அனாக் சிலாங்கூர் (யாவாஸ்) உதவி நிறுவன தகவல் தொடர்பு மேலாளர் தெரிவித்தார்.

அந்த திட்டத்தில்  பங்கேற்கும் குழந்தைகளின் நர்சரி அல்லது குழந்தை பராமரிப்பு மையங்களுக்கான  RM100 மானிய கட்டண விண்ணப்பமானது, நான்கு மற்றும் அதற்கு குறைவான வயதுடைய இரண்டு குழந்தைகள் அல்லது அதற்கு மேல் பிள்ளைகளை கொணடுள்ள நடுத்தர வருமான குடும்பங்களுக்கு (M40) திறக்கப் பட்டுள்ளது என்று ஷாரிசான் முகமட் ஷாரிவ் தெரிவித்தார்.

"இந்தத் திட்டத்தின் மூலம், தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பெற்றோர்கள் நர்சரி அல்லது பராமரிப்பு மைய  (டேகேர் சென்டர்) கட்டண உதவியாக மாதத்திற்கு RM100 பெறுவார்கள். விண்ணப்பங்கள் குறைவாகவே உள்ளன, இப்போதே விண்ணப்பிக்கலாம்.

"உதவித்தொகை குழந்தைகளின் நர்சரி அல்லது குழந்தை பராமரிப்பு மையத்திற்கு நேரடியாக செலுத்தப்படும்," என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

https://asuhpintar.yawas.my/web/ மூலம் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் தேவையான முழுமையான ஆவணங்களை 14 வேலை நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.

குழந்தையின் பிறப்புச் சான்றிதழின் நகல்; விண்ணப்பதாரர் மற்றும் மனைவியின் அடையாள அட்டையின் நகல் மற்றும் தத்தெடுப்பு சான்றிதழ்/விவாகரத்து/இறப்புச் சான்றிதழ்/ஒற்றை தாய்/நோய் சான்றிதழ் நகல் (தேவைப்பட்டால்) ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

கூடுதலாகக் குடியிருப்பு நிலை உறுதிப்படுத்தல் முத்திரை போன்ற பிற ஆவணங்கள் (சிலாங்கூர்வாசிகள் அல்லாதவர்களுக்கு); துணை ஆவணங்கள் அல்லது உறுதிமொழிகள் (சிறப்பு வழக்குகளுக்கு) மற்றும் விண்ணப்பதாரர் மற்றும் மனைவியின் சமீபத்திய சம்பள சீட்டுகள் ஆகியவை தேவை.

விண்ணப்பத் தகுதிகளில் பின்வருவன அடங்கும்:

- மலேசியர்

- சிலாங்கூரில் பிறந்து வசிப்பவர் அல்லது சிலாங்கூரில் பிறக்கவில்லை, ஆனால் குறைந்தது ஐந்து வருடங்கள் வசிப்பவர்

- RM5,000 மற்றும் அதற்கும் குறைவான குடும்ப வருமானம்

- கணவன் மனைவி வேலை செய்பவர்கள்

- நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள்

- இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே

– சமூக நலத்துறையில் பதிவு செய்யப்பட்ட நர்சரி

– விண்ணப்பிக்கும் இடத்தில் ஒரு வாக்காளர்களாக தாய் மற்றும் தந்தை பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.