SELANGOR

36,326 தவாஸ் உறுப்பினர்களுக்குப் பள்ளி உபகரண உதவி   

4 ஜனவரி 2024, 3:55 AM
36,326 தவாஸ் உறுப்பினர்களுக்குப் பள்ளி உபகரண உதவி   

ஷா ஆலம், ஜன 4: சிலாங்கூர் குழந்தைகள் நிதியத்தின் (தவாஸ்) மொத்தம் 36,326 உறுப்பினர்கள் இந்த ஆண்டு முதல் வகுப்பில் சேர உள்ளனர். அவர்கள் பள்ளி நுழைவு உதவித் திட்டத்தின் (பிபிஎம்எஸ்) கீழ் பள்ளி உபகரண உதவிகளைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர்.

பள்ளி உதவி பொருட்களில் பள்ளி பைகள், எழுதுபொருட்கள், உணவுப் பாத்திரங்கள் மற்றும் உண்டில்கள் ஆகியவை அடங்கும் என யாயாசான் வாரிசான் அனாக் சிலாங்கூர் (யாவாஸ்) நிறுவனத்தின் உதவி நிறுவன தொடர்பு மேலாளர் கூறினார்.

யாவாஸ் உதவிக்கான தகுதி மற்றும் அதைப் பெறுவதற்கான முறையைப் பார்க்க பெற்றோர்கள் தவாஸ் விண்ணப்பத்தைப் நாடலாம் என ஷாரிசான் முகமட் ஷாரிவ் கூறினார்.

"யாவாஸ் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பதிந்து கொள்ளுங்கள். மாநில சட்டமன்றத்தின் சமூக சேவை மையத்தில் உதவியைப் பெறலாம்.

"இந்த உதவியானது மாணவர்களுக்குப் பள்ளி உபகரணங்களை வழங்குவதில் பெற்றோரின் சுமையைக் குறைக்கும் என்று நம்புகிறோம்," என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

முன்னதாக, 2017 இல் பிறந்த தவாஸ் உறுப்பினர்களின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள், உதவி விநியோகத்திற்கான தகவலைப் புதுப்பிக்க யாவாஸ் கேட்டுக்கொண்டது.

2008 இல் தொடங்கப்பட்ட தவாஸ் திட்டம் சிலாங்கூரில் பிறந்த குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தொடங்கப்பட்டது. அக்குழந்தைகள் மூன்று வயதை அடைவதற்கு முன்பே பதிவு செய்யப்பட வேண்டும். இத்திட்டத்தின் மூலம் உறுப்பினர்கள் 18 வயதை அடையும்போது RM1,500 பெறுவார்கள்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.