ஷா ஆலம், ஜன 4: மதிப்பீட்டு வரியைச் செலுத்துவது வழி அம்பாங் குடியிருப்பாளர்கள் அதிர்ஷ்டக் குலுக்கு மூலம் நான்கு மோட்டார் சைக்கிள்களைப் பரிசாக வெல்லும் வாய்ப்பை அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) வழங்குகிறது.
மூன்று கதவுகள் கொண்ட குளிர்சாதன பெட்டிகள், தொலைக்காட்சிகள், சலவை இயந்திரங்கள், மடிப்பு சைக்கிள்கள், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் வேக்கியூம் கிளினர் போன்ற பல்வேறு மாதாந்திர பரிசுகளும் வழங்கப்படுவதாக எம்பிஏஜே தெரிவித்தது.
"எம்பிஏஜே மதிப்பீட்டு வரி 2024ஐ ஐகாம் எம்பிஏஜே (Icomm MPAJ) மூலம் https://icomm.mpaj.gov.my என்ற இணைப்பில் செலுத்துவதே எளிதான வழி அல்லது நீங்கள் அதை Google Play அல்லது App Store இல் பதிவிறக்கம் செய்யலாம்.
அதைத் தவிர, மதிப்பீட்டு வரி நிலுவைகள் எதுவும் இல்லை என்பதுதான் பங்கேற்பதற்கான முக்கிய நிபந்தனை” என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.
கட்டணம் செலுத்தும் காலம், முதல் தவணை ஜனவரி 1 முதல் பிப்ரவரி 29 வரையிலும், இரண்டாவது தவணை ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரை ஆகும்.
மேலும், தகவலுக்கு http://www.mpaj.gov.my ஐப் பார்வையிடவும் அல்லது எம்பிஏஜே வருவாய்த் துறையை 03-4285 7358, 03-4285 7294 அல்லது வாட்சாப் 019-333 3927 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.




