SELANGOR

ஶ்ரீ கெம்பாங்கன் புதிய பசாரின் (சந்தை) கட்டுமானம் நவீன, பசுமை சூழல் அம்சங்களை கொண்டிருக்கும்  

3 ஜனவரி 2024, 8:30 AM
ஶ்ரீ கெம்பாங்கன் புதிய பசாரின் (சந்தை) கட்டுமானம் நவீன, பசுமை சூழல் அம்சங்களை கொண்டிருக்கும்  

ஷா ஆலம், ஜன 3: ஜாலான் பெசார், ஶ்ரீ கெம்பாங்கனில் இந்த ஆண்டின் மத்தியில் தொடங்கப் படவுள்ள புதிய காலை சந்தையின் கட்டுமானம் நவீன, பசுமைச்சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்.

சோலார் பேனல்கள், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் (SPAH) மற்றும் உரம் தயாரிக்கும் இயந்திரங்களின் பயன்பாடு ஆகியவை இதில் அடங்கும் என்று ஶ்ரீ கெம்பாங்கன் மாநில சட்டமன்ற உறுப்பினர் வோங் சியு கி கூறினார்.

"இந்த நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த சந்தைகளை நிர்மாணிப்பதற்கு இச்சந்தை ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும் வகையில் இத்திட்டத்தை மாநில அரசுக்கு கொண்டு வர முயற்சிப்பேன்.

"கூடுதலாக, மாற்றுத்திறனாளிகள் (OKU) மற்றும் முதியவர்களுக்கு மிகவும் உகந்ததாக இருக்க முன்மொழியப்பட்டுள்ளது," என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

சம்பந்தப்பட்ட சந்தை கட்டிடத்தை வடிவமைக்க ஒரு போட்டியை சுபாங் ஜெயா மாநகராட்சி ஏற்பாடு செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது என சியு கி மேலும் கூறினார்.

"இந்தச் சந்தையில் பசுமையை உணர முடியும் என்றும், அட்டவணைப்படி கட்டுமானப் பணி நடக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்," என அவர் கூறினார்.

முன்னதாக, மாநில அரசால் ஒதுக்கப்பட்ட RM6 மில்லியன் மதிப்பீட்டில் புதிய சந்தையின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டின் மத்தியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப் படுவதாகச் சியூ கி தெரிவித்தார்.

இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. இது 400 வர்த்தகர்களுக்கு இடமளிக்கும்.

தற்போது, வணிகங்கள் சீராக இயங்குவதை உறுதி செய்வதற்காகத் வர்த்தகர்கள் (டிரான்சிட்) இடம் மாறி-மாறி வருகின்றனர்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.