SELANGOR

சீனப் புத்தாண்டு கொண்டாடுபவர்களுக்கு ஷோப்பிங் வவுச்சர்கள் - சுங்கை ரமால் சட்டமன்றம்

3 ஜனவரி 2024, 8:28 AM
சீனப் புத்தாண்டு கொண்டாடுபவர்களுக்கு ஷோப்பிங் வவுச்சர்கள் - சுங்கை ரமால் சட்டமன்றம்

ஷா ஆலம், ஜன 3: இன்று தொடங்கி ஜனவரி 19 வரை சீனப் புத்தாண்டு ஷோப்பிங் வவுச்சர்களுக்கு விண்ணப்பிக்க சுங்கை ரமால் மாநில சட்டமன்ற வாக்காளர்கள் அழைக்கப் படுகிறார்கள்.

சம்பந்தப்பட்ட பகுதியில் சீனப் புத்தாண்டைக் கொண்டாடும் சமூகத்தினருக்கு ஜோம் ஷோப்பிங் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் நிபந்தனைகளுடன் திறந்திருக்கும் என்று பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் சியாஹ்ரெட்சன் ஜோஹான் தெரிவித்தார்.

"விண்ணப்பாரத்தைப் பாங்கி நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தில் பெறலாம் அல்லது https://bit.ly/BorangJSPCNYN26 என்ற இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

ஒரு குடும்பத்திற்கு ஒரு விண்ணப்பதாரர் மட்டுமே தகுதியுடையவர் ஆவார். குடும்ப வருமானம் RM4,000 (குடும்பம்) அல்லது RM3,000 (தனி) கீழ் இருக்க வேண்டும் மற்றும் முழுமையான ஆவணங்களுடன் விண்ணபிக்க வேண்டும்" என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

``பிங்காஸ், ஸ்கீம் மெஸ்ர ஊசிய எமாஸ் மற்றும் ஸ்கீம் மெஸ்ர இன்சான் இஸ்திமேவா ஆகியவற்றைப் பெறுபவர்கள் இந்த வவுச்சருக்கு விண்ணப்பிக்க முடியாது``, என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

மேலும் தகவலுக்குப் பாங்கி தொகுதியின் மக்கள் சேவை மையத்தை நாடவும் அல்லது 03-87401108 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.

சிலாங்கூர் பட்ஜெட் 2024யில் ஜோம் ஷோப்பிங் வவுச்சர் திட்டத்திற்காக RM16.48 மில்லியன் ஒதுக்கப் பட்டுள்ளது. இதன் மூலம், 82,400 பெறுநர்கள் பயனடைவர்.

பொருளாதார நிலைமை மற்றும் மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு வவுச்சர் மதிப்பு RM 100 இல் இருந்து RM 200 ஆகவும் அதிகரிக்கப் பட்டது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.