ஷா ஆலம், ஜன 3 - உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் அதிகார
வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள நான்கு ஸ்மார்ட் சிலாங்கூர் இலவசப்
பஸ் தடங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.
எச்.எஸ்.01 (கோல குபு பாரு-ராஜா-புக்கிட் செந்தோசா), எச்.எஸ்.02 (அந்தாரா
காப்பி-பத்தாங் காலி-அந்தாரா காப்பி), எச்.எஸ்.03 (புக்கிட் செந்தோசா-
கொரேக்டைல் ரிவர்- புக்கிட் செந்தோசா) மற்றும் எச்.எஸ்.04 (தாமான்
பூங்கா ராயா-புக்கிட் செந்தோசா) ஆகியவையே மறுசீரமைப்பு செய்யப்பட்ட
அந்த நான்கு தடங்களாகும் என்று நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக்
பதிவில் கூறியது.
உலு சிலாங்கூர் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ் சேவைக்கு அதிகரித்து வரும் ஆதரவைக் கருத்தில் கொண்டு இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அது தெரிவித்தது.
கிள்ளான் பள்ளத்தாக்கில் பொது போக்குவரத்தை குறிப்பாக பஸ்
சேவையை தரம் உயர்த்தும் நோக்கில் போக்குவரத்து அமைச்சுடன்
இணைந்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலீடு,
வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
இங் ஸீ ஹான் முன்னதாக கூறியிருந்தார்.
மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் குறுகலான தடங்களில்
ஸ்மார்ட் சிலாங்கூர் சேவைக்கு மாற்றாக டி.ஆர்.டி. எனப்படும் தேவை
அடிப்படையிலான டிரான்சிட் சேவையை வழங்குவதும் அந்த ஆய்வில்
அடங்கும் என அவர் சொன்னார்.




