ஷா ஆலம், ஜன 2: கிள்ளான் நகராண்மை கழகம் (எம்பிகே) தலைவர் டத்தின் படுகா நோரைனி ரோஸ்லான் மாநகராட்சி மேயராக இன்று பதவி ஏற்றுள்ளார்.

நியமனக் கடிதம் மற்றும் ஆணை ஒப்படைப்பை மாநிலச் செயலாளர் டத்தோ செத்தியா ஹரிஸ் காசிம் நடத்தி வைத்தார் என மாநிலச் செயலாளர் அலுவலகம் முகநூலில் தெரிவித்தது.

டத்தின் படுகா நோரைனி ரோஸ்லான் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் என முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு முன், ஒரு முறை சுபாங் ஜெயா மாநகராட்சியின் மேயராக நோரைனி பணியாற்றி உள்ளார்.

2011 முதல் 2017 வரை நகராண்மை கழக அந்தஸ்தைப் பெற்ற கோலா சிலாங்கூர் மாவட்ட கவுன்சிலின் தலைவராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

அவர் அமெரிக்காவின் வட கரோலினா பல்கலைக்கழகத்தில் பிராந்திய திட்டமிடலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 1989 முதல் 2010 வரை எம்பிகே மற்றும் 2010 முதல் 2011 வரை பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி நகர்ப்புற திட்டமிடல் துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.