SELANGOR

 புக்கிட் மாலாவத்தியைப் பார்வையிடுவதற்காக இலகுரக வாகனங்களுக்கு அனுமதி

2 ஜனவரி 2024, 7:14 AM
 புக்கிட் மாலாவத்தியைப் பார்வையிடுவதற்காக இலகுரக வாகனங்களுக்கு அனுமதி

ஷா ஆலம், ஜன 2: இன்று முதல், வார நாட்களில் கோலா சிலாங்கூரில் உள்ள புக்கிட் மாலாவத்திக்கு வரும் சுற்றுபயணிகள் வேன்கள், கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் போன்ற இலகுரக வாகனங்களில் வர அனுமதிக்கப்படுகின்றனர்..

தற்போதுள்ள டிராம் சேவை வார இறுதி நாட்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும் என கோலா சிலாங்கூர் நகராண்மை கழகம் தெரிவித்துள்ளது.

"இந்த அனுமதி மாற்றத்திற்கு உட்பட்டது மற்றும் தற்போதைய தேவைகளைப் பொறுத்தது" என்று உள்ளூர் அதிகாரசபை (பிபிடி) சமீபத்தில் அதன் அதிகாரப்பூர்வ முகநூலில் தெரிவித்துள்ளது.

திங்கள் முதல் வெள்ளி வரை பள்ளி விடுமுறை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக டிராம்கள் இயங்கும்.

சரித்திர சிறப்பு வாய்ந்த புக்கிட் மாலாவத்தியில், சுல்தானின் கல்லறை, பங்லிமா ஹிதம் கல்லறை மற்றும் பூசுட் மாலாவத்தி போன்ற 1,001 கதைகளுடன் பல்வேறு வரலாற்றைக் கொண்டுள்ளது.

மேலும், அங்கு ஏழு கிணறுகள், நச்சுக் கிணறு, நூறு படிக்கட்டுகள், பாடாங் சிலாட், பீரங்கிகள் மற்றும் அரண்மனை பொக்கிஷங்கள் உள்ள குகை (ஈட்டிகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள்) ஆகியவை உள்ளன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.