SELANGOR

2024 ஆண்டு காலண்டர்களை மந்திரி புசார் விநியோகித்தார்

2 ஜனவரி 2024, 7:10 AM
2024 ஆண்டு காலண்டர்களை மந்திரி புசார் விநியோகித்தார்

கோம்பாக், ஜன 2: நேற்று செலாயாங் பாரு சந்தைக்கு  வருகை அளித்து பொதுமக்களுக்கு சுமார் ஆயிரம் 2024 காலண்டர்களை டத்தோ மந்திரி புசார் அவர்கள் விநியோகித்தார்.

காலை 10.00 மணிக்கு சுங்கை துவா மாநில சட்டமன்ற சேவை மையத்தின் (DUN) ஊழியர்களுடன் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவ்விடத்திற்கு வருகை புரிந்தார்.

"வருடத்தின் தொடக்கத்தில் விடுமுறை நாட்களில் செலாயாங் பாரு சந்தை போன்ற மையப் பகுதிகளில் வசிப்பவர்களைச் சந்தித்ததோடு, வளாகத்தை சுற்றியுள்ள உள்கட்டமைப்பின் நிலையைப் பார்ப்பது மற்றும் அது நல்ல நிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது  எனது வழக்கமாகும் என்றார்.

"15 ஆண்டுகளுக்கு முன்பு நான் பிரதிநிதியாக ஆனதில் இருந்து மக்களுடனான எனது நெருங்கிய உறவின் விளைவாக இன்றைய விநியோகத் திட்டம் குடியிருப்பாளர்கள் இடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது," என்று அவரைச் சந்தித்தபோது கூறினார்.

கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினரும், பார்வையாளர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களுடன் அரபு ரொட்டி சார்டின் மற்றும் தே தாரேக் அருந்தி மகிழ்ந்தார்.

மேலும், சந்தையில் நாட்டு கோழி மற்றும் கெம்போங் மீன்களையும் வாங்கினார்.

காலை சந்தையில் சுமார் ஒரு மணி நேரம் செலவழித்த அமிருடின் தன்னுடன் செல்ஃபி எடுக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கைகளையும் நிறைவேற்றினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.