SELANGOR

வர்த்தக கடனைத் திரும்ப செலுத்த மாற்று திட்டம் ஏற்பாடு - ஹிஜ்ரா

2 ஜனவரி 2024, 3:06 AM
வர்த்தக கடனைத் திரும்ப செலுத்த மாற்று திட்டம் ஏற்பாடு - ஹிஜ்ரா

ஷா ஆலம், ஜன 2: நிதிச் சிக்கல்களை எதிர்கொள்ளும் தொழில் முனைவோர், வர்த்தகக் கடனை திரும்ப செலுத்த மாற்று திட்டத்தை யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா) ஏற்பாடு செய்துள்ளது.

தொழில்முனைவோரின் கடனைத் திருப்பிச் செலுத்தும் அட்டவணையை மறுசீரமைக்க உதவும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

"கடனைத் திருப்பிச் செலுத்தும் அட்டவணையை மறுசீரமைக்க நிதி மீட்புத் திட்ட சலுகைகளுடன்  உதவ நாங்கள் தயாராக உள்ளோம்.

"மேலும் தகவலுக்கு 18 சிலாங்கூர் ஹிஜ்ரா கிளைகளில் உள்ள அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும்" என்று முகநூல் மூலம் தெரிவிக்கப் பட்டது.

இதற்கிடையில், நிதி தவணைகளை திருப்பிச் செலுத்துவதில் பொறுப்பாக இருக்கும் தொழில் முனைவோரின் அர்ப்பணிப்பை ஹிஜ்ரா பெரிதும் பாராட்டுகிறது.

"உங்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவது மற்ற தொழில் முனைவோருக்கு அவர்களின் வணிகத்திற்கான மூலதனத்தைப் பெறுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டது.

87,090 ஹிஜ்ரா தொழில் முனைவோரில் மொத்தம் 78 சதவீதம் பேர் ஏஜென்சி வழங்கும் பல்வேறு கடன் திட்டங்களைக் கால அட்டவணைப்படி தொடர்ந்து செலுத்துகின்றனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.