SELANGOR

பத்தாங் காலி, கோலா குபு பாரு பகுதிகளில் ஸ்மார்ட் பார்க்கிங் கட்டண முறை அமல்

2 ஜனவரி 2024, 1:52 AM
பத்தாங் காலி, கோலா குபு பாரு பகுதிகளில் ஸ்மார்ட் பார்க்கிங் கட்டண முறை அமல்

ஷா ஆலம், ஜன 2: நேற்று முதல் பத்தாங் காலி மற்றும் கோலா குபு பாரு பகுதிகளில் ஸ்மார்ட் பார்க்கிங் கட்டண முறையின் இரண்டாம் கட்டம் தொடங்கியது.

ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங் (SSP) மற்றும் ஃப்ளெக்ஸி பார்க்கிங் செயலிகள் மூலம் பயனர்கள் பார்க்கிங் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் தெரிவித்தது.

இத்திட்டத்திற்கான முதல் கட்டம் டிசம்பர் 1 முதல் புக்கிட் பெருந்தோங் மற்றும் புக்கிட் செந்தோசாவில் அமல்படுத்தப்பட்டது.

காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை (திங்கள் முதல் வெள்ளி வரை) பார்க்கிங் கட்டணம் ஒரு மணி நேரத்திற்கு RM0.50 மற்றும் மாதத்திற்கு RM50 ஆகும். சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்கள் இலவசம் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஏதேனும் கேள்விகள் இருந்தால் 1-700-819-612 / 03-6064 1331 நீட்டிப்பு 135 என்ற ஹாட்லைனைத் தொடர்பு கொள்ளவும்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.