SELANGOR

பாதசாரிகள் மற்றும் மிதிவண்டி பாதைகள் மேம்படுத்தப்படும் - கிள்ளான் நகராண்மை கழகம்

29 டிசம்பர் 2023, 7:40 AM
பாதசாரிகள் மற்றும் மிதிவண்டி பாதைகள் மேம்படுத்தப்படும் - கிள்ளான் நகராண்மை கழகம்

ஷா ஆலம், டிச 29: கிள்ளான் ஒரு நிலையான நகரமாக மாறும் முயற்சியில் பாதசாரிகள் மற்றும் மிதிவண்டி பாதைகளைக் கிள்ளான் நகராண்மை கழகம் மேம்படுத்தும்.

அவற்றை மேம்படுத்துவது குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்று வருவதாக அதன் தலைவர் டத்தின் படுகா நோரைனி ரோஸ்லான் தெரிவித்தார்.

"தற்போதுள்ள வழித்தடங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதுடன், புதிய பாதசாரிகள் மற்றும் சைக்கிள் பாதைகளை உருவாக்குவதற்கான முன்மொழிவு, 2030ஆம் ஆண்டு வரை வளர்ச்சி கட்டத்தின் கீழ் வசதி வலையமைப்பைத் தொடர உதவும்" என்று அவர் கூறினார்.

முகநூல் லைவ் எம்.பி.கே மூலம் நேற்று நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட முழு டிசம்பர் எம்.பி.கே கூட்டத்தில் பேசும் போது அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி, 1.5 மீட்டராக இருந்த ஜாலான் பசார் நடைபாதை 6 மீட்டர் (மீ) அகலத்திற்கு மேம்படுத்தப்பட்டது.

"800 மீட்டர் ஜாலான் பசார் வழியாக உள்ள நான்கு பாதைகளில் ஒன்று, முசாடின் பாலத்திலிருந்து லெபுஹ் தபாவில் சாலையின் மூலைக்கு மாற்றப்படும்.

"விரிவாக்கப்பட்ட பாதசாரி பாதையானது மாற்றுத்திறனாளிகளுக்கு (OKU) 'தொட்டுணரக்கூடிய' வசதிகளையும் வழங்குகிறது.

மேலும், இந்த பாதையானது கிள்ளான் நகர அரச பாரம்பரிய பாதையை 3 கிலோமீட்டர் (கிமீ) தூரத்திற்கு விரிவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்." என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.