SELANGOR

கல்வி நிறுவனங்களுக்கு வருடாந்திர கல்வி மானியம் அறிமுகம் – பத்து தீகா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்

29 டிசம்பர் 2023, 3:23 AM
கல்வி நிறுவனங்களுக்கு வருடாந்திர கல்வி மானியம் அறிமுகம் – பத்து தீகா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்

ஷா ஆலம், டிச. 29 - அடுத்த ஆண்டு முதல் தொகுதியில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வருடாந்திர கல்வி மானியத்தை அறிமுகப்படுத்த உள்ளது பத்து தீகா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அல்-ரஷித் ஹரோன் தெரிவித்தார்.

இந்த முன்மொழிவு கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்துவதையும் பள்ளிகளுடன் நல்ல உறவுகளை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் மாணவர்களே மானிய விண்ணப்பத்திற்கான படைப்பைத் தயாரிப்பார்கள் என்று அவர் நம்புகிறார்.

"இந்நடவடிக்கை இளைஞர்களுக்கும் மாநிலப் பிரதிநிதிக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தும் மற்றும்  மாணவர்களுக்கு அனுபவமாக அமையும் என்றும் நான் நம்புகிறேன்," என அவர் நேற்று சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

தற்போதைய அனைத்து திட்டங்களின் வளர்ச்சியையும், எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும், குறிப்பாக வெள்ளத்தை குறைக்கும் திட்டங்களின் வளர்ச்சியையும் கண்காணிப்பதாக டேனியல் உறுதியளித்தார்.

ஷா ஆலம் இன்டர்நேஷனல் லாஜிஸ்டிக்ஸ் ஹப் (SAILH) மேம்பாட்டுத் திட்டத்தை பிரிவு 16 இல் செயல் படுத்துவது உள்ளூர்வாசிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

"இதுவரை, நாங்கள் அனைத்து நிறுவனங்களையும் சந்தித்துள்ளோம், மேலும், ஒவ்வொரு திட்டமும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வோம் மற்றும் திட்டமிடப்பட்டவை வெற்றிகரமாக முடிக்கப்படும்" என்று டேனியல் கூறினார்.

கடந்த ஜூலை மாதம், ஷா ஆலம் இன்டர்நேஷனல் லாஜிஸ்டிக்ஸ்  ஹப் 28.73 ஹெக்டேர் நிலப்பரப்பில், RM2 பில்லியன் முதலீட்டு மதிப்புடன் அமையும் என்று மந்திரி புசார் தெரிவித்தார்.

இது 2028 ஆம் ஆண்டுக்குள் 5,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் முதல் கட்டம் 2025 இல் நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.