SELANGOR

சிலாங்கூர் மாநில சுற்றுப்பயண கவர்ச்சிகளை அறிய  டிக்டாக் வழி தகவல்கள் 

28 டிசம்பர் 2023, 2:08 AM
சிலாங்கூர் மாநில சுற்றுப்பயண கவர்ச்சிகளை அறிய  டிக்டாக் வழி தகவல்கள் 

ஷா ஆலம், டிச 28: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மாநிலத் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கான ஒரு முக்கிய தளமாக டிக்டாக்  விளக்குவதாக  டூரிஸம் சிலாங்கூர் கூறுகிறது.

எனவே, புதிய மற்றும் பிரபலமான சுற்றுலா இடங்களை விளம்பரப்படுத்த 95 சதவீதம் டிஜிட்டல் முறை பயன்படுத்துவதாக அதன் நிறுவன தகவல் தொடர்பு மேலாளர் தெரிவித்தார்.

சிலாங்கூர் டூரிஸம் டிக்டோக் கணக்கைக் கிட்டத்தட்ட 200,000 பேர் பின்தொடர்கின்றனர். மேலும் 500,000 பேர் அதனை பார்வையிட்டதுடன் மொத்தம் 2 மில்லியன் லைக்குகளை கிடைத்துள்ளன.

"மக்கள் சிலாங்கூரில் உள்ள சுவாரசியமான இடங்களைப் பார்வையிடுவதற்காக முதலில் தங்கள் பயணத்தை திட்டமிட டிஜிட்டல் தளங்களை நாடுவதன் மூலம் விளம்பர நடவடிக்கைகள் பெரும் உதவியாக உள்ளன என்பதை நிரூபிக்கிறது," என்று அஹ்மட் நஸ்ரி தஷ்ரிக் ரஹ்மத் கூறினார்.

சுங்கை பஞ்சாங் வேளாண் சுற்றுலா, நேச்சர் தெரபி ஃபாரஸ்ட் ஹவுஸ், உலு சிலாங்கூர், ஸ்பிளாஸ் மேனியா வாட்டர் தீம் பார்க், கமூடா கோவ் மற்றும் ரவாங்கில் உள்ள ஸ்கைலைன் லுஜ் ஆகியவை செயலில் உள்ள விளம்பரங்களில் அடங்கும் என்றார்.

முன்னதாக, இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை சிலாங்கூரில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4.8 மில்லியனை எட்டியது. அதில் பல மாவட்டங்களில் மக்களை ஈர்க்கும் இடங்களாக அமைந்துள்ளன என அஹ்மட் நஸ்ரி கூறினார்.

பெட்டாலிங்  மாவட்டத்திலுள்ள கஃபேக்கள் மற்றும் ஷாப்பிங் சென்டர்கள் போன்ற கேஸ்ட்ரோனமிக் ஈர்ப்புகளால் 2.8 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது என்று அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.