SELANGOR

சுங்கை துவா தொகுதியில் மலிவு விற்பனை- 200 பாக்கெட் இறைச்சி, மீன் ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன

27 டிசம்பர் 2023, 12:00 PM
சுங்கை துவா தொகுதியில் மலிவு விற்பனை- 200 பாக்கெட் இறைச்சி, மீன் ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன

கோம்பாக், டிச 27- இன்று இங்கு நடைபெற்ற சுங்கை துவா தொகுதி நிலையிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனையில் மீன், இறைச்சி உள்ளிட்ட பொருள்கள் பொது மக்களின் அமோக ஆதரவைப் பெற்றன.

பத்து கேவ்ஸ் பொது மைதானத்தில் இன்று காலை நடைபெற்ற இந்த மலிவு விற்பனையில் பங்கேற்பதற்காக காலை 7.00 மணி முதல் திரளான மக்கள் வரிசையில் காத்திருந்ததாக இந்த விற்பனையின் ஒருங்கிணைப்பாளர் நாஸிப் ஜூல்கிப்ளி கூறினார்.

இந்த விற்பனை காலை 9.30 மணிக்கு தொடங்கிய வேளையில் வரிசை எண்கள் காலை 9.00 மணி முதல் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. இந்த விற்பனையில் ஒரு மணிக்கும் குறைவான நேரத்தில் 200 பாக்கெட் இறைச்சி மற்றும் 200 பாக்கெட் மீன் விற்றுத் தீர்ந்தன என்றார் அவர்.

ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு தட்டு முட்டை, ஒரு கோழி, ஒரு பாக்கெட் அரிசி என கட்டுப்பாடு விதித்திருந்தோம். கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் விதமாக காலை 11.00 மணி முதல் அனைத்து வருகையாளர்களும் பொருள்களை வாங்குவதற்கு அனுமதி வழங்கினோம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

மாநில அரசின் இந்த ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும்  ஒரு தட்டு பி கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும் ஒரு பாக்கெட் இறைச்சி 10.00 வெள்ளிக்கும் ஒரு பாக்கெட் மீன் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00  வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை தவிர்த்து வாரத்தின் ஆறு நாட்களும் இந்த மலிவு விற்பனை நடத்தப்படுகிறது. மேலும், வட்டார மக்கள் பயன்பெறுவதற்கு ஏதுவாக செகி ப்ரெஷ் பேரங்காடியின் உதவியுடன் மாநிலம் முழுவதும் உள்ள  அதன் கிளைகளில் மலிவு விற்பனை நடத்தப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.