SELANGOR

முதலாம் படிவ மாணவர்களுக்குச் சிறப்புக் கல்வித் திட்டம்

27 டிசம்பர் 2023, 11:55 AM
முதலாம் படிவ மாணவர்களுக்குச் சிறப்புக் கல்வித் திட்டம்

ஷா ஆலம், டிச 27: மலேசிய கல்வி அமைச்சகத்தின் யாயாசான் சிலாங்கூர் சிறப்புக் கல்வித் திட்டத்திற்கான முதலாம் படிவ மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் எதிர்வரும் ஜனவரி 3 முதல்  யாயாசான் சிலாங்கூர் திறக்கவுள்ளது. அதற்கான விண்ணப்பங்களை சிலாங்கூர் வரவேற்கிறது.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சிறப்பு விண்ணப்ப  ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு  ஜனவரி 15 ஆம் தேதி முதல்  ஜனவரி 26 ஆம் தேதி வரை  திறந்திருக்கும்  என்று முகநூல் வழியாக யாயாசான் சிலாங்கூர் தெரிவித்துள்ளது.

"ஆரம்பப் பள்ளியில் 6 ஆம் ஆண்டு மதிப்பீட்டில் (PBD) அனைத்து பாடங்களிலும் குறைந்தபட்சம் TP3 ஐப் பெறுவது விண்ணப்பத்திற்கு தகுதி அளவு கோல்களில் ஒன்றாகும்.

"மலேசிய கல்வி அமைச்சகத்தின் தொடக்கப் பள்ளிகள் அல்லது அதன் கீழ் பதிவு செய்யப்பட்ட தனியார் பள்ளிகளில் கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப் படுகிறது," என்று தெரிவிக்கப்பட்டது.

விண்ணப்பதாரர் அல்லது தாய் அல்லது தந்தை சிலாங்கூரில் பிறந்தவராகவோ அல்லது குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வசிப்பவராகவோ இருக்க வேண்டும் என்றும் பெற்றோரின் வருமானம் மாதத்திற்கு RM2,000க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்றும் யாயாசான் சிலாங்கூர் அறிவித்தது.

"மேலும் தகவலுக்கு, yayasanselangor.org.my என்ற இணைப்பின் மூலம் யாயாசான் சிலாங்கூர் இணையதளத்தைப் நாடவும்" .

இது திட்டமானது கல்வி அமைச்சு மற்றும் யாயாசான் சிலாங்கூர் இடையேயான ஒரு கூட்டுத் திட்டமாகும்.

இந்தத் திட்டம் சிலாங்கூரில் உள்ள ஏழை மாணவர்களுக்குச் சிறந்த கல்வி வசதிகளை வழங்குவதன் மூலம் அவர்கள் கல்வியில் சிறந்த முடிவுகளைப் பெறுவதற்கு உதவுவதற்காகச் செயல்படுத்தப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப் பட்ட மாணவர்களுக்கு நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்களால் வகுப்புகள், பயிற்சிகள் மற்றும் தேர்வு கருத்தரங்குகள் போன்ற கல்வி வழிகாட்டுதலுடன் கூடுதலாக உதவித்தொகையும் வழங்கப்படும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.