SELANGOR

பொது உள்கட்டமைப்பு மேம்பாடு திட்டங்களுக்காக RM10 மில்லியன் ஒதுக்கீடு - எம்பிஎச்எஸ்

27 டிசம்பர் 2023, 7:19 AM
பொது உள்கட்டமைப்பு மேம்பாடு திட்டங்களுக்காக RM10 மில்லியன் ஒதுக்கீடு -  எம்பிஎச்எஸ்

உலு சிலாங்கூர், டிச 27: அடுத்த ஆண்டு குடி மக்களின் வசதிக்காக பொது உள்கட்டமைப்பு மேம்பாடு திட்டங்களுக்காக கிட்டத்தட்ட RM 10 மில்லியனை உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் (எம்பி எஸ் எஸ்) ஒதுக்கியுள்ளது.

இந்தத் தொகை இந்த ஆண்டு முழுவதும் சேகரிக்கப்பட்ட RM96 மில்லியனுக்கும் அதிகமான மொத்த வருவாய் சேகரிப்பில் 10 சதவிகிதம் ஆகும் என்று யாங் டிபெர்துவா முகம்ட் ஹஸ்ரி நோர் முகமட் கூறினார்.

“மண்டபங்கள், சாலைகள், வடிகால்கள், பொதுச் சந்தைகள் மற்றும் கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த  உலு சிலாங்கூர் நகராண்மை கழக  இருப்பில் 10 சதவீதத்தை பயன்படுத்துவோம்.

"குடியிருப்பாளர்கள் செலுத்திய வரிகளுக்கு நாங்கள் சிறந்த வசதிகளை வழங்க விரும்புகிறோம்," என்று அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் அனைத்து உள்ளூர் அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும் என்று நவம்பர் மாதம் டத்தோ மந்திரி புசார் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில்  ஊராச்சி மன்றங்கள்  தங்களது நிதிச் சேமிப்பில் குறைந்தது 10 சதவீதத்தையாவது பயன்படுத்த வேண்டும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.