SELANGOR

விழுந்து கிடந்த மரத்தில் வாகனம்  மோதியதில் இருவர் மரணம்

20 டிசம்பர் 2023, 4:55 AM
விழுந்து கிடந்த மரத்தில் வாகனம்  மோதியதில் இருவர் மரணம்

அம்பாங், டிச 20: நேற்று ஜாலான் உத்தாமா கம்போங் லெம்பா ஜெயா உத்தாராவில் விழுந்து கிடந்த மரத்தில் மோதியதில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில்  ஓட்டுநர்கள் இருவர் உயிரிழந்தனர்.

பிற்பகல் 3.51 மணி அளவில் நடந்த இச்சம்பவத்தில், கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் அம்பாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து பிற்பகல் 3.51 மணி அளவில் அவரது தரப்புக்கு தகவல் கிடைத்தது என அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் முகமட் அசாம் இஸ்மாயில் கூறினார்.

“இறந்த இரண்டு பேரும் உள்ளூர் ஆண்கள் என்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.

"மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) மற்றும் குடிமைத் தற்காப்புப் படை (ஏபிஎம்) மூலம் சம்பவ இடத்தில் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது," என்று கூறினார்.

அவன்ஷா காரும் யமஹா 135LC மோட்டார் சைக்கிளும் வீழ்ந்துக்கிடந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக அவர் கூறினார்.

மேலும், சம்பவ இடத்திலிருந்து பாதிக்கப்பட்டவரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது,'' என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.