SELANGOR

ஆண்டு மதிப்பீட்டு வரியைச் செலுத்த முந்துங்கள் RM10 மதிப்புள்ள டச் என் கோ கார்டை & சுவர் கடிகாரம் பெறுங்கள்- எம்பிகேல்

20 டிசம்பர் 2023, 4:28 AM
ஆண்டு மதிப்பீட்டு வரியைச் செலுத்த முந்துங்கள் RM10 மதிப்புள்ள டச் என் கோ கார்டை & சுவர் கடிகாரம் பெறுங்கள்- எம்பிகேல்

ஷா ஆலம், டிச 20: ஆண்டு சொத்து மதிப்பீட்டு வரியைச் செலுத்த முந்தும் முதல் 5000 பேருக்கு கோலா லங்காட் நகராண்மை கழகம்  RM10யுடன் டச் என் கோ கார்ட்  அல்லது சுவர் கடிகாரத்தை சன்மானமாக வழங்குகிறது.

2024இன் ஒரு வருட காலத்திற்கு RM200 மற்றும் அதற்கு மேல் மதிப்பீட்டு வரி செலுத்துவது மற்றும் நீண்ட காலம் நிலுவைத் தொகை இல்லாதது ஆகியவை தகுதி அளவுகோல் களாகும் என்று நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.

"பிரத்தியேக எம்பிகேல் வடிவமைப்பு கொண்ட இந்த டச் என் கோ கார்டு சலுகையானது முதல் வரி செலுத்தும் 2,000 பேருக்கும் மற்றும் கையிருப்புகள் இருக்கும் வரை மட்டுமே" என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

RM100 முதல் RM200 வரை மதிப்புள்ள மதிப்பீட்டு வரியை முன்கூட்டியே செலுத்தும் 3,000 நபர்களுக்கு எம்பி கேல் முத்திரை பதித்த  பிரத்யேக  சுவர் கடிகாரங்கள் நினைவு பரிசுகளாக வழங்கப்படும்.

"எம்பிகேஎல் தலைமையகம், பெர்சியாரான் மஜ்லிஸ் ஜாலான் சுல்தான் ஆலம் ஷா, பந்திங், அமலாக்க அலுவலகம், ஜாலான் ஸ்டேடியம் தெலுக் டத்தோ மற்றும் பண்டார் சௌஜானா புத்ரா கிளை அலுவலகம் ஆகியவற்றில் பணம் செலுத்தியதற்கான ஆதாரத்தைக் கொண்டு வந்து இந்த சலுகையை பெறலாம்.

"கோலா லங்காட் மக்களே, எதற்காக காத்திருக்கிறீர்கள். மதிப்பீட்டு வரியைச் செலுத்துவதற்கான உங்கள் பொறுப்பை நிறைவேற்றுங்கள்,"

மதிப்பீட்டு வரி தொடர்பான ஏதேனும் கேள்விகளுக்கு, வருவாய் பிரிவு, எம்பிகேல் கருவூலத் துறைக்கு அல்லது 03-3853 0303 அல்லது 019-471 6755 / 019-472 6755 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் செய்யவும்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.