SELANGOR

நாளை மேலும் மூன்று இடங்களில் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா விற்பனை

19 டிசம்பர் 2023, 8:59 AM
நாளை மேலும் மூன்று இடங்களில் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா விற்பனை

ஷா ஆலம், டிச 19: அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப்

பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான்

ரஹ்மா திட்டம் நாளை மேலும் மூன்று இடங்களில் காலை 10

மணிக்குத் தொடரும்.

நாளை பூசாட் டேசா கம்போங் பாரிட் மஹாங் (ஈஜோக்), ஃபுட்கோர்ட் தெரத்தாய் (தெரத்தாய்) மற்றும் லோட் 25057, லோரோங் செரம்பாங் 1, ஜாலான் தெலோக் பூலாய் (செலாட் கிள்ளான்) ஆகிய இடங்களில் மலிவு  விற்பனை  நடைபெறும்.

சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகத்தால் (PKPS) கிட்டத்தட்ட 3000

இடங்களில் இந்த மலிவு விற்பனை நடத்தப்பட்டுள்ளது.   ஐந்து

மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்த இச்சந்தைக்குச்

சிலாங்கூர் அரசு RM40 மில்லியன் மானியத்தைச் செலவிட்டுள்ளது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும்

மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை

ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00

வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5

கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற

இணைப்பின் மூலம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி

அறிந்து கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.