SELANGOR

கோகேல் பேருந்து சேவையைப் பயன்படுத்தும் வெளிநாட்டினர்களிடம் RM1 வசூலிக்கப்படும்

19 டிசம்பர் 2023, 7:37 AM
கோகேல் பேருந்து சேவையைப் பயன்படுத்தும் வெளிநாட்டினர்களிடம் RM1 வசூலிக்கப்படும்

கோலாலம்பூர், டிச 19 – ஜனவரி 1, 2024 முதல் கோகேல் பேருந்து சேவையைப் பயன்படுத்தும் வெளிநாட்டினர்களிடம் RM1 வசூலிக்கப்படும்.

நகர மையத்தைச் சுற்றியுள்ள நான்கு வழித்தடங்களை உள்ளடக்கிய நிலைகளில் கட்டணம் வசூலிக்கப்படும் என கோலாலம்பூர் நகர மண்டபம் (DBKL) தெரிவித்தது, அதாவது பாதை 01 (பச்சை), பாதை 02 (ஊதா), பாதை 03 (சிவப்பு), மற்றும் பாதை 04 (நீலம்) என வகைப்படுத்தப்பட்டுள்ளன

“பணமில்லா பரிவர்த்தனைகள் மட்டுமே மேற்கொள்ள முடியும் (டச் ‘என் கோ கார்டுகள், கியூ ஆர் குறியீடுகள், கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள்). இருப்பினும், குடிமக்கள் அல்லாத 12 வயது மற்றும் அதற்கு குறைவான அனைத்து குழந்தைகளுக்கும் இந்த சேவை இலவசம், ”என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், டச் ‘என் கோ அம்சத்துடன் MyKads ஐப் பயன்படுத்தும் மலேசிய குடிமக்கள் இலவச சேவையை அனுபவிக்க தங்கள் MyKad ஐ பதிவு செய்ய வேண்டும்.

டிசம்பர் 1 முதல், கேல்சிசி பேருந்து நிலையம், தித்திவங்சா (Pekeliling) பேருந்து நிலையும் மற்றும் பசார் செனி பேருந்து நிலையம் ஆகிய மூன்று இடங்களில் காலை 7 மணி முதல் மதியம் வரையும், மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் பதிவு கவுண்டர்களை அமைத்துள்ளதாக டிபிகேல் தெரிவித்துள்ளது.

அதன் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட கோ கேல் பேருந்துகளில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் மெனாரா டிபிகேல் நுழைவாயில் உள்ள வழக்கமான பதிவு கவுண்டர் டிசம்பர் 6 முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும்.

ஏதேனும் கேள்விகளுக்குப் பொதுமக்கள் 03-2028 2298 (அலுவலக நேரம்) அல்லது jpb@dbkl.gov.my என்ற மின்னஞ்சல் முகவரில் தொடர்பு கொள்ளலாம்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.