ஷா ஆலம், டிச 18: தற்போதைய வடகிழக்கு பருவமழை நிகழ்வைத் தொடர்ந்து வெள்ளம்
ஏற்பட்டால் அதன் பிந்தைய நடவடிக்கைகளுக்கு உதவ கிட்டத்தட்ட 7,000 KDEB கழிவு
மேலாண்மை (KDEBWM) ஊழியர்கள் தயாராக உள்ளனர்.
அனைத்துத் துறைகளைச் சேர்ந்த 6,000க்கும் மேற்பட்ட பொதுத் ஊழியர்களும் மற்றும்
550 ஆர்ம்ரோல் அல்லது ரோல்-ஆன்-ரோல்-ஆஃப் (ரோரோ) ஓட்டுநர்கள் உள்ளனர் என
அதன் நிர்வாக இயக்குநர் டத்தோ ராம்லி தாஹிர் கூறினார்.
“வெள்ளத்திற்குப் பிறகு பொது துப்புரவுப் நடவடிக்கையின் தேவைகளுக்கு ஏற்ப
ஊழியர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.
"அனைத்து 550 ரோரோக்களும் நல்ல நிலையில் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது
மற்றும் KDEBWM ஆல் இயக்கப்படும் அனைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் செல்ல
முடியும்" என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.
பருவமழை நவம்பரில் தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் வரை நீடிக்கும் என்று மலேசிய
வானிலை ஆய்வுத் துறை இயக்குநர் ஜெனரல் முஹம்மட் ஹெல்மி அப்துல்லா
தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி உலர் உணவு மற்றும் அன்றாடத் தேவைகள்
உள்ளிட்ட 10,000 அடிப்படை உதவிப் பேக்கட்டுகளை மாநில அரசு வழங்கியது.
தீயணைப்புப் படை, ராணுவம் மற்றும் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவை கருவிகளை
வழங்குமாறும், மீட்புப் பணிகள் சீராக நடைபெறுவதற்கு அவை நல்ல நிலையில்
இருப்பதை உறுதி செய்யுமாறும் நிர்வாகம் கேட்டுக் கொண்டது.




