ஷா ஆலம், டிச 18: மக்களுக்கான சேவைதிறனை மேம்படுத்துவதற்கான முயற்ச்சிகளைச் செயல்படுத்த பங்குதாரர்களுக்கு உதவுவதற்காக ஐந்து வருட காலப்பகுதியில் ``பிஜே சீட்`` சமூக மானியத்திற்காக மொத்தம் RM2.44 மில்லியனைப் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி ஒதுக்கியுள்ளது.
பெட்டாலிங் ஜெயா பிந்தார், பெர்டாயா தஹான் மற்றும் பெர்டாயா தஹான் 2030 (PJSSR 2030) திட்டங்களின் கீழ் 2019 முதல் சமூக மானியங்களுக்கான 138 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டன என அதன் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் பிரிவின் மீடியா செயலகம் தெரிவித்தது.
"இந்த மானியம் பெட்டாலிங் ஜெயாவில் அல்லது அதற்கு வெளிபுறத்தில் அமைந்துள்ள சங்கங்கள், பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் போன்ற அனைத்து பங்குதாரர்களுக்கும் திறந்திருக்கும்.
"இந்நடவடிக்கை, PJ SSR 2030 திட்டத்தின் அடிப்படையில் எம்பிபிஜேயின் செயல்திறனை மேம்படுத்த உதவும் திட்டங்கள் அல்லது யோசனைகளை சமர்ப்பிக்க அனுமதிக்கிறது," என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப் பட்டது.
இந்த ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட 25 விண்ணப்பங்களுக்கு மொத்தம் RM542,682.39 ஒதுக்கப் பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரசபை (பிபிடி) தெரிவித்தது, அவற்றில் 12 குறைந்த கார்பன் நகரம் என்ற கருப்பொருளின் கீழ் சமூகத் தோட்டத் திட்டங்கள் ஆகும்.
மேலும், கற்றல் நகரம், மறு சுழற்சி, பொருளாதாரம் (மூன்று திட்டங்கள்), மீள் மற்றும் பாதுகாப்பான நகரம் (இரண்டு திட்டங்கள்) என்ற கருப்பொருளின் கீழ் ஆறு கல்வி மற்றும் கற்றல் திட்டங்கள் அடங்கும். அதே நேரத்தில் பொருளாதார நகரம் மற்றும் சமூகம் என்ற கருப்பொருளின் கீழ் இரண்டு திட்டங்களைக் கொண்டுள்ளன.
"அனுமதிக்கப்பட்ட திட்டம் எம்பிபிஜேயின் செயல்திறனை மலேசியாவில் ஒரு சிறந்த பிபிடியாக மேம்படுத்த உதவுவதோடு, சர்வதேச அளவில் 2030 நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDG2030) அடைய உதவும் என்று நம்பப்படுகிறது.
"இத்திட்டம் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு ஏற்ப செயல்படுத்தப்படும் மற்றும் இதன் மூலம், பெட்டாலிங் ஜெயாவில் வசிப்பவர்கள் பயனடைவார்கள்" என்று தெரிவிக்கப்பட்டது.




