SELANGOR

வீடமைப்பு பகுதியில் போக்குவரத்து விளக்குகளை அகற்ற நடவடிக்கை - எம்.பி.கே.ஜே

18 டிசம்பர் 2023, 5:53 AM
வீடமைப்பு பகுதியில் போக்குவரத்து விளக்குகளை அகற்ற நடவடிக்கை - எம்.பி.கே.ஜே
வீடமைப்பு பகுதியில் போக்குவரத்து விளக்குகளை அகற்ற நடவடிக்கை - எம்.பி.கே.ஜே

செமினி, டிச 18: செமினியில் பண்டார் ரிஞ்சிங் செக்‌ஷன் 4,பண்டார் தாமான் தான் ஸ்ரீ மாணிக்க வாசகத்தில்  உள்ள வீடமைப்பு பகுதியில் போக்குவரத்து சீர் செய்யும் எந்த நடவடிக்கையும் ``பொது மராமத்து இலாகா, எம்.பி.கே.ஜே, மேம்பாட்டாளர் மற்றும் ஆலோசனை பொறியிலாளர்களுடன் நன்கு கலந்து ஆலோசனை செய்தப் பின் போக்குவரத்து மேம்பாடு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

எம்.பி.கே.ஜே கவுன்சில் உறுப்பினர்கள் ராமச்சந்திரன் அர்ஜூனன் மற்றும் முகமட் சுல்கிஃப்லி ஹாஜி ரிட்ஜ்வான் ஆகியோர் அத்திட்டத்தை  பார்வையிட்ட பின்னர் சம்பந்தப்பட்ட பகுதியை மேம்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அபாயங்கள் குறித்து  விவாதித்தாகத் தெரிவித்தனர்.

"சாலை பாதுகாப்பு மதிப்பீடு (RSA)" ஆய்வை மேற்கொள்வதற்காக டெவலப்பருக்கு ஒரு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது மற்றும் இது தொடர்பாக எம்.பி.கே.ஜே பொறியிலாளர் துறை மூலம் ஜேகேஆர் மற்றும் கவுன்சில் உறுப்பினர்களுடன் விவாதிக்கப்படும்.

எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தின் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

``குடியிருப்பாளர்களுக்கு மேம்பாடு தொடர்பான ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது பரிந்துரைகள் இருந்தால் தெரிவிக்கலாம். மேலும், பரஸ்பர நல்வாழ்வை உறுதிப்படுத்த அவர்கள் எங்களுடன் கலந்துரையாடலாம்``, என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.