கிள்ளான், டிச 15: மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்படாத தொழிற்சாலைகள் (KTK) தொழில் நடத்தும் நிலத்தை அரசாங்கம் அபகரிப்பதைத் தவிர்க்க, அதன் செயல் முறைகள் சட்டங்களுக்கு உட்பட்டு இருப்பதை உறுதிப்படுத்த வலியுறுத்தினார்..
இந்நடவடிக்கை உள்ளூர் அதிகாரிகளால் (PBT) வெளியிடப்பட்ட செயல்பாட்டு விதிமுறைகளுக்கு இணங்க தொழில் முனைவோரைத் தயார்ப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்று உள்ளூர் அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சியு லிம் கூறினார்.
"அங்கீகரிக்கப்படாத தொழிற்சாலைகளுக்கு அங்கீகாரம் வழங்கி அதனை சட்டபூர்வமான தாக்கும் முயற்சி இரு தரப்பினருக்கும் பயனளிப்பதாகும். அங்கீகரிக்கப்படாத தொழிற்சாலைகளும் மாநில பொருளாதார பங்களிப்பாளர்களாக இருப்பதால் அனைவருக்கும் நன்மை பயக்கும் விவேகமான மற்றும் முழுமையான அணுகுமுறை மாநில அரசு இன்னும் கடைப்பிடிக்கிறது.
தொழில் முனைவோர் விதிமுறைகளுக்கு இணங்க, தேவைகளுக்கு ஏற்ப செயல்பட மறுத்தால் , தொழிற்சாலை இயங்கும் இடங்களின் நில உரிமையை மீட்டுக்கொள்ளும், படிவம் 7A ஐ பயன்படுத்த ஊராட்சி மன்றங்கள் பணிக்கப்படும் என்று அவர் கூறினார்.
கிள்ளான் முனிசிபல் கவுன்சில் அனுமதியின்றி செயல்படும் , சுமார் 400க்கும் மேற்பட்ட தொழில் முனைவர்கள் கலந்து கொண்ட டவுன் ஹால் சந்திப்பு கூட்டத்தில் , அவர் இதனை கூறினார்.
நிலம் கையகப்படுத்த பட்டால் மாநில அரசால் நிர்ணயிக்கப்பட்ட நில பிரீமியத்தை அதன் உரிமையாளர் செலுத்த வேண்டும்.
"அதிகரிக்கும் அமலாக்கத்திற்கு கூடுதலாக, மாநில அரசு தொழிற்சாலை நடத்துபவர்களுக்கு பணம் செலுத்துதல் உட்பட பல்வேறு அம்சங்களில் உதவ விரும்புகிறது. தொழிற்சாலை பதிவுக்கு வசதியாக அடுத்த ஆண்டு புதிய கொள்கையை மாநில அரசு உருவாக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.




