ஷா ஆலம், டிச 15: அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே),அதன் நிர்வாகத்தின்
கீழ் மழலையர் பள்ளி மற்றும் நர்சரிகளை நடத்துவதற்கு மொத்தம் 189 வளாகங்களுக்கு
அக்டோபர் வரை நிபந்தனை அடிப்படையில் தற்காலிக வணிக உரிமங்களுக்கான
(எல்பிஎஸ்பி) விண்ணப்பங்களை வழங்குகிறது.
சட்டப்பூர்வமாக்கும் திட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகள் நிர்ணயித்த
நிபந்தனைகளுக்கு இணங்கக் கூடிய குழந்தை பராமரிப்பு மையங்கள், தஹ்ஃபிஸ்
மையங்கள் மற்றும் நலன்புரி மையங்கள் ஆகியவை அடங்கும் என அதன் தலைவர்
டாக்டர் அனி அஹ்மாட் கூறினார்.
அவ்வாளகங்கள் முக்கிய சாலை சந்திப்பு, போக்குவரத்து நெரிசல் உள்ள சாலையில் இருந்து தொலைவில் அமைந்திருக்க வேண்டும், உச்ச போக்குவரத்து நேரத்தில் இடையூறாக இருக்க கூடாது மற்றும் குடியிருப்பு பகுதிகளின் வசதிகளுக்காக குடியிருப்பின் ஒதுக்குபுறமான இடங்களில் மட்டுமே செயல்பட அனுமதிக்கப் படுகிறது.
எல்.பி.எஸ்.பி இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வளாகங்களை
சட்டப் பூர்வமாகச் செயல்பட அனுமதிக்கிறது. இருப்பினும், ஆறு மாதங்களுக்குள்,
தொழில் முனைவோர் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அவை திட்டமிடல் அனுமதிக் கடிதம் (KM), சமூக நலத் துறை மற்றும் சிலாங்கூர் கல்வித்
துறையின் ஒப்புதல் அல்லது அனுமதி மற்றும் வணிக உரிமம் வழங்கப்படுவதற்கு முன்
நிர்ணைக்கப் பட்ட நிபந்தனைகளுக்கு இணங்கி இருக்க வேண்டும், என அவர் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்
இதற்கிடையில், டிசம்பர் 2 ஆம் தேதி எம்.பி.ஏ.ஜே ஆடிட்டோரியத்தில்
தொழில் முனைவோரின் விழிப்புணர்வு க்காக தனது தரப்பு சட்டப்பூர்வமாக்கும் திட்டம்
தொடர்பான விளக்க அமர்வை நடத்தியதாக அவர் கூறினார்.
மாநாட்டு அமர்வில் வலியுறுத்தப்பட்ட விஷயங்களில், குடியிருப்பு கட்டிட
உபயோகத்தின் பொருள் மாற்றம் (கட்டிட உபயோகத்தை மாற்றுதல்), தொடர்புடைய
ஆவணங்கள் அல்லது திட்டங்கள் மற்றும் எல்.பி.எஸ்.பி பதிவு அமர்வுக்கான திட்டமிடல்
அனுமதி கடிதத்திற்கான விண்ணப்ப வழிகாட்டுதல்கள் செயல்முறையை அனி
விளக்கினார்.
எல்.பி.எஸ்.பி சலுகைக் கடிதத்தைப் பெறும் தொழில்முனைவோரை இந்த
சட்டப்பூர்வமாக்கும் திட்டத்தில் பங்கேற்க எம்பிஏஜே வரவேற்கிறது, என்று அவர்
மேலும் கூறினார்.
இத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவலுக்கு, எம்பிஏஜே நகர திட்டமிடல் துறையை 03-
42857008 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.




