ஷா ஆலம், டிச.15: கிறிஸ்துமஸ் மற்றும் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, தளவாடப் பொருட்கள், மின்சாதனங்கள் மற்றும் பல்வேறு வகையான பழைய பொருட்களை இலவசமாக அப்புறப்படுத்தும் திட்டத்தை பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (எம்பிபிஜே) ஏற்பாடு செய்துள்ளது.
'ஸ்பிரிங் கிளீனிங்' திட்டம் டிசம்பர் 16 முதல் 24 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின், எதிர்வரும் ஜனவரி 6 முதல் பிப்ரவரி 3 வரை மீண்டும் நடத்தப்படும் என்று எம்பிபிஜே முகநூல் வழியாக அறிவித்தது.
"காலை 10 மணிக்குள் பொருட்களை வீட்டின் முன் வைக்க வேண்டும். அதற்கு மேல் தாமதமானால் மீண்டும் பொருட்கள் வசூல் செய்யப்படாது" என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஏதேனும் கேள்விகள் இருந்தால் எம்பிபிஜே திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது துப்புரவு துறையை 03-7954 1440 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.




