SELANGOR

புகார் கிடைத்த 24 மணி நேரத்திற்குள்  சாலை சரிசெய்யப்பட்டது

14 டிசம்பர் 2023, 7:41 AM
புகார் கிடைத்த 24 மணி நேரத்திற்குள்  சாலை சரிசெய்யப்பட்டது

ஷா ஆலம், டிச.14: தஞ்சோங் காராங்கில் உள்ள ஜாலான் ராஜா மூசாவில், மாநில சாலை பராமரிப்பு நிறுவனம் இன்ஃப்ராசெல் எஸ்டிஎன் பிஎச்டி (இன்ஃப்ராசெல்) சாலை சேதம் குறித்து புகார் கிடைத்த 24 மணி நேரத்தில் சாலையை சரி செய்தது.

X பக்கத்தில், #INFRASEL இல் பொதுப் புகாரைப் பெற்ற பிறகு, மேம்பாட்டு பணி மேற் கொள்ளப் பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

"பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் 24 மணி நேரத்திற்குள் தஞ்சோங் காராங்கில் உள்ள ஜாலான் ராஜா மூசாவில் '' நிரந்தர சாலை மேம்பாட்டு பணி கல் தூவி சாலை சமம்  செய்யும்  முறை'' மேற்கொள்ளப் படுவதற்கு முன்பு, தற்காலிகமாகக் குழிகளைத் மூடும் பணி மேற்கொள்ளப்பட்டது," என்று X பக்கம் வழியாக தெரிவிக்கப்பட்டது.

#INFRASEL #StreetName #District அடையாளத்துடன் (சாலை சேதம் ஏற்பட்டால்) X பக்கத்தில் பதிவேற்றம் செய்வதன் மூலம் பொதுமக்கள் தொடர்ந்து புகார்கள் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

ஆகஸ்ட் 22 அன்று, மாநிலம் முழுவதும் 93 பெரிய அளவிலான சாலை மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவது 86 சதவீதத்தை எட்டியுள்ளதாக இன்ஃப்ராசெல் ஆபரேஷன்ஸ் எக்ஸிகியூட்டிவ் அப்துல்லா ஹனிஃப் அப்துல் காலிப் அறிவித்தார்.

சிலாங்கூரில் மெகா சாலை மேபாட்டு திட்டம் 50 மில்லியன் ரிங்கிட் செலவில் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டன. இத்திட்டத்தில் பொதுமக்களின் புகார்களைக் கருத்தில் கொண்டு கூடுதலாகச் சீரமைக்கப்பட வேண்டிய சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

இத்திட்டத்தில் உள்ளாட்சிச் சாலைகள் (PBT), பொதுப் பணித் துறை (JKR), நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (JPS) மற்றும் மாவட்ட மற்றும் நில அலுவலகம் (PDT) உட்பட 118 சாலைகள் உள்ளடங்கியதாக ஜூலை 9 அன்று, உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் அசிம்  தெரிவித்தார்.

முன்னதாக, மாநிலத்தின் சாலைகள் நல்ல நிலையில் இருப்பதை உறுதிசெய்ய 50 மில்லியன் ரிங்கிட் நிதியுடன் ஒரு பெரிய அளவிலான திட்டம் மேற்கொள்ளப் பட்டுள்ளது என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.