SELANGOR

RM2.571 பில்லியன் வருவாய் ஈட்டியதன் மூலம் மாநில அரசின் ஆளுமைத் திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது

14 டிசம்பர் 2023, 7:27 AM
RM2.571 பில்லியன் வருவாய் ஈட்டியதன் மூலம் மாநில அரசின் ஆளுமைத் திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது

ஷா ஆலம், டிச. 14: இந்த மாத தொடக்கத்தில் RM2.571 பில்லியன் வருவாய் ஈட்டியதன் மூலம் சிலாங்கூரை முன்னேற்றுவதற்கான மாநில அரசின் ஆளுமைத் திறன் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2023 ஆம் ஆண்டு இலக்கான RM2 பில்லியனை விட 128 சதவீதத்தை தாண்டிய இச்சாதனை மக்களின் நலனுக்காக திருப்பித் தரப்படும் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விளக்கினார்.

"நாங்கள் தொடர்ந்து கடினமாக உழைத்து, எங்கள் பணிகளை பன்முகப்படுத்துவோம், இதன் மூலம் அதன் பயனை அனைவரும் அனுபவிக்க முடியும்" என்று அவர் நேற்று முகநூலில் தெரிவித்தார்.

மாநில அரசு, சிலாங்கூரை வலுப்படுத்தவும், மக்களின் நலனைப் பாதுகாக்கவும் சிறப்பாக ஆட்சி செய்யும் என டிசம்பர் 11 அன்று அமிருடின் உறுதி அளித்தார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜிடிபி பங்களிப்பு 25.5 சதவீதமாக அதிகரித்ததால், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியும் மேம்பட்டுள்ளது. இது மலேசியாவின் பொருளாதாரத்தில் கால் பங்கை விட அதிகமாகும்.

40,000 ஏக்கர் பரப்பளவில் தெற்கு சிலாங்கூர் ஒருங்கிணைந்த மேம் பாட்டுப் பகுதி (IDRISS) திட்டத்தை மேம் படுத்துவது உட்பட பல்வேறு திட்டங்கள் மாநில நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் விளக்கினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.