SELANGOR

இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட்டின் முதலாவது அரச புரவலராக ராஜா மூடா நியமனம்

14 டிசம்பர் 2023, 7:20 AM
இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட்டின் முதலாவது அரச புரவலராக ராஜா மூடா நியமனம்

ஷா ஆலம், டிச 14 - இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் நிறுவனத்தின்

முதலாவது அரச புரவலராகச் சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா

நியமிக்கப்பட்டுள்ளார்.

நிறுவனத்தின் சுய அடையாளத்தை அனைத்துலக நிலைக்கு உயர்த்தும்

நிறுவனத்தின் நோக்கத்திற்கேற்ப இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக

மாநில அரசின் துணை நிறுவனமான இன்வெஸ்ட் சிலாங்கூர் கூறியது.

வளங்கள் மற்றும் சமூக ரீதியாக பொருளாதாரத்தை மேம்படுத்தும மாநில

அரசின் தொலைநோக்குக்கேற்ப மாநில முதலீட்டை ஊக்குவிக்கும்

திட்டத்திற்கு மேன்மை தங்கிய ராஜா மூடாவின் இந்த பங்கேற்பு

உறுதுணையாக அமைகிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின்

கூறியதாக அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

அரச புரவலராக இருப்பதற்கு ராஜா மூடா வழங்கிய ஒப்புதல் தங்களுக்கு

மிகப்பெரிய அங்கீகாரமாகவும் மேலும் தரமான உள்நாட்டு மற்றும்

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகளை

இரட்டிப்பாக்குவதற்கான ஊக்குவிப்பதாகவும் விளங்குவதாக மந்திரி புசார்

கூறினார்.

அதிக வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய வேலை வாய்ப்புகளை

மலேசியர்களுக்கு உருவாக்கித் தருவதற்கு இந்த நடவடிக்கை மிகவும்

முக்கியமானதாக அமைக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ராஜா மூடாவை புரவலராகக் கொண்டதன் மூலம் நிறுவனத்தின் நீண்ட

கால வியூகங்களையும் அபிலாஷைகளையும் வலுப்படுத்தி

தென்கிழக்காசியாவின் தலைசிறந்த முதலீட்டு மையமாகச் சிலாங்கூரை

பிரபலப்படுத்துவதற்கும் வாய்ப்பு கிட்டும் என்று இன்வெஸ்ட் சிலாங்கூர்

தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ ஹசான் அஸ்ஹாரி இட்ரிஸ்

கூறினார்.

இந்த நியமனத்திற்கு மேன்மை தங்கிய ராஜா மூடா ஒப்புதல் அளித்தது

குறித்து தாங்கள் பொருமிதம் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.