ஷா ஆலம், டிச 14: உயிர்கள் வாழ மரம் என்ற (‘Shah Alam Trees For Life’ ) திட்டத்தின் மூலம் 2010 ஆம் ஆண்டு முதல் மொத்தம் 177,899 பல்வேறு வகையான மரங்களை ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) நட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டுக்குள் ஷா ஆலம் நகரைக் குறைந்த கார்பன் நகரமாக மாற்றும் திட்டத்திற்கு ஏற்ப மரக்கன்றுகள் நடவு செய்யப் படுவதாகச் நடப்பு டத்தோ பண்டார் செரெமி தர்மன் தெரிவித்தார்.
"பல்வேறு உயர் கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த 22,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை உள்ளடக்கிய 68 மரம் நடும் நிகழ்ச்சிகளை எம்பிஎஸ்ஏ ஏற்பாடு செய்துள்ளது" என்று அவர் கூறினார்.
நேற்று தாமான் தாசிக் ஷா ஆலமில் ‘Shah Alam Trees For Life’' நிகழ்ச்சிக்குப் பிறகு, அடுத்த ஆண்டு ஷா ஆலம் நகரை அழகு படுத்துவதை தனது தரப்பு வலியுறுத்த உள்ளதாகக் கூறினார்.
மரங்களை நடுவதுடன், ஷா ஆலம் வாகனம் இல்லா தினம், பெரிந்திஸ் ஹிஜாவ், டுசுன்@மை செகோலா மற்றும் சைக்கிள் டிராக்குகள் ஏற்பாடு செய்தல் போன்ற நிகழ்ச்சிகளையும் எம்பிஎஸ்ஏ நடத்தியது.
"நகரம் முழுவதும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது உட்பட நிலப்பரப்பை அழகுபடுத்தும் அம்சங்களையும் நாங்கள் வலியுறுத்துவோம்," என்று அவர் விளக்கினார்.




