கிள்ளான், டிச 13: 2024 ஆம் ஆண்டு மலாக்காவுக்குச் செல்வதற்கான அடையாள அழைப்பாகச் சிலாங்கூரில் உள்ள 12 ஊராட்சி மன்றங்களுக்கு (பிபிடி) மலாக்கா நகராண்மை கழகம் வரலாற்றுச் சிறப்புமிக்க மலாக்கா மரங்களை வழங்கியது.
மரம் நடும் திட்டம் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதுடன் இரு மாநிலங்களின் ஊராட்சி மன்றங்களுக்கிடையேயான நட்புறவின் அடையாளமாகத் திகழும் என மலாக்கா மேயர் டத்தோ ஷடான் ஓத்மான் கூறினார்.
"மலேசியா தீபகற்பம் முழுவதும் உள்ள மொத்தம் 150 பிபிடிகள் அடுத்த ஆண்டு வரலாற்று மாநிலத்திற்கான அடையாள அழைப்பாக மலாக்கா மரத்தைப் பெற்றன.
"பொதுமக்கள் உட்பட அனைத்து உள்ளூர் அதிகாரிகளையும் மலாக்காவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் இரண்டு நாட்களுக்கு மேல் தங்குமாறு நாங்கள் அழைக்கிறோம். மேலும், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் காருக்கான அதிர்ஷ்டக் குலுக்கு போட்டியில் வெல்வதற்கான வாய்ப்பும் உள்ளது.
இதற்கிடையில், கிள்ளான் நகராண்மை கழகத் தலைவி டத்தின் படுகா நோரெய்னி ரோஸ்லான், நீண்டகால ஒத்துழைப்பின் அடையாளமாக மலாக்கா மரத்தை ஒப்படைப்பதை தனது தரப்பு வரவேற்பதாக தெரிவித்தார்.
"இந்த மரங்களைச் சிலாங்கூரில் உள்ள அனைத்து பிபிடிகளுக்கும் ஒப்படைப்பதை நாங்கள் வரவேற்கிறோம். மேலும் இது இரு மாநிலங்களிலும் உள்ள அனைத்து பிபிடிகளுக்கும் இடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.
"கார்பன் உமிழ்வைக் குறைக்கும் விதமாக பண்டார் புக்கிட் ராஜாவைச் சுற்றி நடுவதற்கு அதே திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான 100 மரங்களை வழங்கிய தனியார் துறை வெரிடாஸ் டிசைன் குழுவிற்கும் நன்றி," என்று அவர் கூறினார்.




