SELANGOR

பள்ளி விடுமுறையொட்டி ஷா ஆலம் தாவரவியல் பூங்காவில் மக்கள் விளையாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

13 டிசம்பர் 2023, 8:16 AM
பள்ளி விடுமுறையொட்டி ஷா ஆலம் தாவரவியல் பூங்காவில் மக்கள் விளையாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

ஷா ஆலம், டிச 13 : எதிர்வரும் சனிக்கிழமை தொடங்கும் பள்ளி

விடுமுறையை முன்னிட்டு தாமான் பெட்டானி நெகாரா எனப்படும் ஷா

ஆலம் தாவரயில் பூங்காவில் பல்வேறு ஜனரஞ்சக நிகழ்வுகளுக்கு ஏற்பாடு

செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வையொட்டி மக்கள் விளையாட்டு, ராட்சத நுரை பலுன்,

கெம்போங் விளையாட்டு, முக ஓவியம், பலுன் கோமாளி உள்ளிட்ட

அங்கங்கள் இடம் பெறும் என அந்த பூங்கா நிர்வாகம் தனது பேஸ்புக்

பதிவில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மரம் நடும் வகுப்புகள், மூலிகை மரங்களை அடையாளம்

காண்பது, கலை மற்றும் கைவினை நடவடிக்கைகள், ஹூசேன் பவுஸி

கால்நடை பண்ணையில் உள்ள பிராணிகளை அருகில் சென்று பார்ப்பது

போன்ற நிகழ்வுகளும் நடைபெறும் என அது கூறியது.

இந்த நிகழ்வுகள் யாவும் காலை 9.00 மணி தொடங்கி நண்பகல் 12.00 மணி

வரை நடைபெறும். இந்த ஏற்பாடுகள் குறித்து மேல் விபரங்களைப்

பெறவிரும்புவர் http://www.tbnsa.gov.my என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம்.

இந்த நிகழ்வுகளுக்கான நுழைவுக் கட்டணம் 12 வயதுக்கும் கீழ்ப்பட்ட

சிறார்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 1.00 வெள்ளியாகவும்

பெரியவர்களுக்கு 3.00 வெள்ளியாகவும் நிர்ணயிக்கப்ப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஐந்து வயதுக்கும் கீழ்ப்பட்ட சிறார்கள்

இந்நிகழ்வுகளில் இலவசமாகப் பங்கேற்கலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.