SELANGOR

பள்ளி விடுமுறையை முன்னிட்டு சிலாங்கூர் ஃபுரூட் வெளியில் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் ஏற்பாடு

13 டிசம்பர் 2023, 8:07 AM
பள்ளி விடுமுறையை முன்னிட்டு சிலாங்கூர்   ஃபுரூட் வெளியில் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் ஏற்பாடு

ஷா ஆலம், டிச 13: பள்ளி விடுமுறையை முன்னிட்டு பெஸ்தாரி ஜெயாவில் உள்ள சிலாங்கூர் ஃபுரூட் வெளிக்குப் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை அனுபவிக்க பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

பள்ளி விடுமுறையைக் குடும்பத்தினருடன் கழிக்க விரும்பும் பார்வையாளர்களுக்காக பல்வேறு பேக்கஜ்கள் மற்றும் சுவாரஸ்யமான நடவடிக்கைகள் காத்திருக்கின்றன என்று மாநில வேளாண் சுற்றுலா மையம் பொதுமக்களுக்குத் தெரிவிக்கிறது.

"பல்வேறு சுவாரசியமான நடவடிக்கைகள் உங்களுக்காக காத்திருக்கின்றன. இங்கு நம் அன்புக்குரியவர்களுடன் நினைவுகளை உருவாக்குவோம், பண்ணைகளின் சூழ்நிலையை நீங்கள் அனைவரும் அனுபவிப்பதற்காக சிலாங்கூர் ஃபுரூட் வெளியில் பல்வேறு பேக்கேஜ்கள் உள்ளன" என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

selangorfruitvalley.my இணையதளத்தின் மூலம், பண்ணை டூர் பேக்கேஜ் என்பது பெரியவர்கள், மாணவர்கள் மற்றும் முதியவர்களுக்கான உள்நாட்டுப் பேக்கேஜ் ஆகும். இதில் முயல், ஆடு மற்றும் வாத்துகளைப் பார்வையிடுவது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

பழங்களைப் பறிப்பது, உப்பு முட்டைகளைத் தயாரிப்பது, மீன் பிடிப்பது மற்றும் ஹைட்ரோபோனிக் காய்கறிகளை நடுவது மட்டுமின்றி, பார்வையாளர்கள் கயாக்கிங் (படகு ஓட்டுதல்) மற்றும் சிலாங்கூர் ஃபுரூட் வெளி பண்ணையில் உள்ள பண்டான் தேங்காய் நீரைச் சுவைக்கலாம்.

20க்கும் மேற்பட்ட பழச் செடிகள் மற்றும் காய்கறித் தோட்டங்களைக் கொண்ட 1,000 ஹெக்டேர் பண்ணையில் பார்வையாளர்களின் நடமாட்டத்தை எளிதாக்கும் வகையில் டிராம் சேவையும் வழங்கப்படுகிறது.

விவசாய நோக்கத்துடன் பொழுதுபோக்கு மற்றும் ஓய்வு நடவடிக்கைகளை வழங்கும் சிலாங்கூர் ஃபுரூட் வெளி, தீபகற்ப மலேசியாவில் மிகப்பெரிய தேனீ உற்பத்தியாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் விலைகள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு RM15 மற்றும் பெரியவர்களுக்கு RM20 ஆகும். சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு RM30 (குழந்தைகள், முதியவர்கள்) மற்றும் பெரியவர்களுக்கு RM40 வசூலிக்கப்படும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.