SELANGOR

வர்த்தகக் கடனை திரும்ப செலுத்த மாற்று திட்டம் - ஹிஜ்ரா

13 டிசம்பர் 2023, 4:33 AM
வர்த்தகக் கடனை திரும்ப செலுத்த மாற்று திட்டம் -  ஹிஜ்ரா

ஷா ஆலம், டிச 13:  நிதிச் சிக்கல்களைக் எதிர்கொண்டுள்ள தொழில்முனைவோர் வர்த்தகக் கடனைத் திரும்ப செலுத்த மாற்று திட்டத்தை யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா) வழங்குகிறது.

இந்தத் திட்டம் பணத்தைத் திருப்பிச் செலுத்தும் அட்டவணையை மறுசீரமைக்க

தொழில்முனைவோருக்கு உதவும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் தகவலுக்கு 18 சிலாங்கூர் ஹிஜ்ரா கிளையில் உள்ள அதிகாரியைத் தொடர்பு

கொள்ளவும்" என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், நிதித் தவணைகளைத் திருப்பிச் செலுத்துவதில் கவனமாக இருக்கும்

தொழில்முனைவோரின் அர்ப்பணிப்பை ஹிஜ்ரா பெரிதும் பாராட்டுகிறது.

``உங்கள் நிதித் தவணைகளைத் திருப்பிச் செலுத்துவது மற்ற தொழில்முனைவோர்

அவர்களின் வணிகத்திற்கான மூலதனத்தைப் பெறுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்,`` என்று தெரிவிக்கப்பட்டது.

87,090 ஹிஜ்ரத் தொழில்முனைவோரில் மொத்தம் 78 சதவீதம் பேர் நிறுவனம் வழங்கும்

பல்வேறு கடன் திட்டங்களைக் கால அட்டவணைப்படி தொடர்ந்து செலுத்துகின்றனர்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.