ஷா ஆலம், டிச 13: உலு சிலாங்கூரில் வசிப்பவர்கள் பழைய தளவாடப்பொருட்களை அல்லது பிற கழிவுகளை (திரவ மற்றும் சமையல் அறை அன்றாட கழிவுகளை தவிர) அப்புறப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட 18 இடங்களில் வைக்கப்பட்டுள்ள ரோல் ஆன் ரோல் ஆஃப் (ரோரோ) தொட்டி சேவையைப் பயன்படுத்தலாம்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு நேற்று தொடங்கிய இச் சேவை டிசம்பர் 21 வரை குடியிருப்பாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் (எம்பிஎச்எஸ்) தெரிவித்துள்ளது.
"மூன்று டன் கொள்ளளவு கொண்ட ரோரோ தொட்டிகள் உலு சிலாங்கூரைச் சுற்றி வைக்கப்பட்டுள்ளன. அவ்விடங்களில் பத்தாங் காலி, புக்கிட் பெருந்தோங், புக்கிட் செந்தோசா, கோலா குபு பாரு மற்றும் பிற பகுதிகள் ஆகும்.
அலமாரிகள், சோஃபாக்கள், மெத்தைகள், படுக்கைகள் போன்ற பழைய தளவாடப் பொருட்கள், ரேடியோக்கள், தொலைக்காட்சிகள், பேட்டரி சார்ஜர்கள், கைப்பேசிகள் போன்ற மின்சார பொருட்கள் மற்றும் தோட்டக் கழிவுகள் ஆகியவற்றை ரோரோ தொட்டிகளில் வீசலாம் என்று எம்பிஎச்எஸ் தெரிவித்தது.
"வீட்டு அல்லது உணவுக் கழிவுகள் போன்ற சமையலறைக் கழிவுகளை இந்த ரோரோ தொட்டியில் வீசுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
"ஒப்பந்தக்காரரின் சேகரிப்பை எளிதாக்குவதற்கும், சுற்றுப் புறத்தைச் சுத்தமாகவும் வசதியாகவும் வைத்திருக்கவும் ரோரோ தொட்டிகளில் மொத்த கழிவுகளை வீசுவதன் மூலம் குடியிருப்பாளர்கள் ஒத்துழைப்பார்கள் என்று நம்பப்படுகிறது," .
ரோரோ தொட்டி சேவை தொடர்பான ஏதேனும் கேள்விகளுக்கு எம்பிஎச்எஸ் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது தூய்மை துறையை 03-6064 1050 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.




