SELANGOR

எம்பிஎஸ்ஏ கிரியேட்டிவ் இடியு கார்னிவல் 2023 ஏற்பாடு - எம்பிஎஸ்ஏ

13 டிசம்பர் 2023, 1:49 AM
எம்பிஎஸ்ஏ கிரியேட்டிவ் இடியு கார்னிவல் 2023 ஏற்பாடு - எம்பிஎஸ்ஏ

ஷா ஆலம், டிச 13: டிசம்பர் 16ஆம் தேதி பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகளுடன் எம்பிஎஸ்ஏ கிரியேட்டிவ் இடியு கார்னிவல் 2023யை ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) ஏற்பாடு செய்துள்ளது.

கலாச்சாரம் மற்றும் சுற்றுலாப் பிரிவு, எம்பிஎஸ்ஏ சமூக மேம்பாட்டுத் துறையால் நிர்வகிக்கப்படும் இந்நிகழ்ச்சி விஸ்மா எம்பிஎஸ்ஏ விருந்து மண்டபத்தில் இலவசமாக நடைபெறவுள்ளது என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

துணி தயாரிக்கும் கலை (ஷிபோரி), தற்காப்புக் கலைகள் (சிலாட்), குழுப் பாடல், சமகால நிகழ்ச்சிகள் (நவீன சர்க்கஸ்) மற்றும் பாரம்பரிய இசை (மலாய் கேமேலான்) ஆகிய பட்டறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அனைத்து நடவடிக்கைகளும் ஒரே நேரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பங்கேற்பாளர்கள் ஒரு பட்டறையில் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

ஆர்வமுள்ளவர்கள், வழங்கப்பட்ட சுவரொட்டியில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம் அல்லது பங்கேற்பு படிவத்தை நிரப்ப https://l1nq.com/6Cjui என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

இத்திட்டம் தொடர்பான ஏதேனும் கேள்விகளுக்கு, 016-3337141 (திரு. அமின் ஃபிக்ரி) அல்லது https://wa.me/60163337141 ஐத் தொடர்பு கொள்ளவும்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.