SELANGOR

தொழில்முனைவோர் கோ டிஜிட்டல் திட்டத்தின் மூலம் RM50,000 வரை நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம்

12 டிசம்பர் 2023, 8:29 AM
தொழில்முனைவோர் கோ டிஜிட்டல் திட்டத்தின் மூலம் RM50,000 வரை நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலம், டிச 12: டிஜிட்டல் மயமாக்கலில் தங்கள் வணிக முறைகளை மாற்ற விரும்பும் தொழில் முனைவோர் கோ டிஜிட்டல் திட்டத்தின் மூலம் RM50,000 வரை நிதியுதவிக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

இத்திட்டத்திற்கு mikrokredit.selangor.gov.my அல்லது ஹிஜ்ரா கிளைகளில் உள்ள அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்று யாயாசான் ஹிஜ்ரா தெரிவித்தது.

"கோ டிஜிட்டல் திட்டம், தொழில்முனைவோர் சமீபத்திய மற்றும் நவீன தளங்கள் மூலம் டிஜிட்டல் மயமாக்கலுக்கு வணிக முறைகளை மாற்றுவதற்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டது.

"இத்திட்டம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை சந்தைப்படுத்துவதற்கான திறனை அதிகரிக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல், இணைய விற்பனையிலிருந்து லாபத்தை அதிகரிக்கவும் முடியும். மேலும் தகவலுக்கு www.hijrahselangor.com ஐப் பார்வையிடவும்," என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

விண்ணப்பதாரரின் தகுதித் தேவைகளில் பின்வருவன அடங்கும்:

மலேசியர்

சிலாங்கூர் குடியிருப்பாளர்

சிலாங்கூரில் வாக்களிப்பு உரிமை

18 முதல் 65 வயது

வணிகம் இயங்கி வருகிறது

குறிப்பிட்ட வணிக வளாகங்கள் உள்ளன

செல்லுபடியாகும் வணிக உரிமம்/அனுமதியின் நகல்

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.