ஷா ஆலம், டிச 12: எதிர்வரும் சனிக்கிழமையன்று அரோரா ரெசிடென்ஸி, சிலாங்கூர் சைபர் வெளி, சைபர்ஜெயாவில் 'பிகேஎன்எஸ் கவர்ச்சியான (ஹாட் டீல்ஸ்') சொத்து விற்பனைத் திட்டப் பிரச்சாரத்தைச் சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகம் (பிகேஎன்எஸ்) ஏற்பாடு செய்துள்ளது.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த பிரச்சாரம் இரண்டு மற்றும் மூன்று மாடி வீடுகளை உள்ளடக்கிய உயர்தர வீட்டுத் திட்டங்களுக்கான பல்வேறு தள்ளுபடிகளையும் சிறப்புப் பேக்கஜ் களையும் வழங்குகிறது என அதன் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் கூறினார்.
"பிகேஎன்எஸ் சொத்துக்களை வாங்கவிருக்கும் அனைத்து வருங்கால வாடிக்கையாளர்களும், விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தத்திற்கான சட்டக் கட்டணங்கள் (SPA), 'மெமோராண்டம் ஆஃப் டிரான்ஸ்ஃபர்' (MOT) முத்திரைக் கட்டணம் மற்றும் RM15,000 மதிப்புள்ள 'ஸ்மார்ட் ஹோம்' பொருட்களை நிறுவுதல் உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான தொகுப்புகளை இலவசமாக அனுபவிப்பார்கள்.
"RM950,000 முதல் RM1.5 மில்லியன் வரையில் நான்கு வகையான வீடுகள் உடனடியாக குடியேற தயாராக உள்ளன, மேலும் அவை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாகும்" என்று முகமட் பைசல் டோலா கூறினார்.
மேலும் தகவலுக்குப் பொதுமக்கள் பிகேஎன்எஸ் சொத்து ஆலோசகர் சைனுடின் முகமட் நோரை 019-288 0717 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.pkns-property.com மற்றும் PKNS Property முகநூலைப் பார்வையிடவும்.




