SELANGOR

தேசிய நிறுவனங்களுக்கான ஆண்டறிக்கை விருது (NACRA) 2023இல் கும்புலன் பெராங்சாங் சிலாங்கூர் (KPS) பெர்ஹாட் தங்கப் பதக்கத்தை வென்றது

5 டிசம்பர் 2023, 11:21 AM
தேசிய நிறுவனங்களுக்கான ஆண்டறிக்கை விருது (NACRA) 2023இல் கும்புலன் பெராங்சாங் சிலாங்கூர் (KPS) பெர்ஹாட் தங்கப் பதக்கத்தை வென்றது

ஷா ஆலம், டிச 5: RM2 பில்லியனுக்கும் குறைவான சந்தை மூலதனம் கொண்ட நிறுவனங்களுக்கான தேசிய வருடாந்திர நிறுவன அறிக்கை விருது (NACRA) 2023இல் கும்புலன் பெராங்சாங் சிலாங்கூர் (KPS) பெர்ஹாட் தங்கப் பதக்கத்தை வென்றது.

இது 2020 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நான்காவது வெற்றியாகும். இந்த வெற்றிக்கு நிறுவன அறிக்கையிடலில் நிலைகள், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் சிறந்து விளங்குதல்  ஆகியவை காரணமாகும் என இண்ஸ்டாகிராம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

"இந்த அங்கீகாரத்தைப் பெறுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இது தொடர்ச்சியான வளர்ச்சியாகும் மற்றும் எதிர்காலத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

``NACRA`` என்பது பர்சா மலேசியா, மலேசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் அக்கவுண்டண்ட்ஸ் (எம்ஐஏ) மற்றும் மலேசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சான்றளிக்கப்பட்ட பொதுக் கணக்காளர்கள் (எம்ஐசிபிஏ) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.

இந்த அங்கீகாரம், பெருநிறுவன அறிக்கையிடல் மற்றும் வெளிப்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.