SELANGOR

பந்திங் தொகுதியின் தீபாவளி பொது உபசரிப்பு டிசம்பர் 10ஆம் தேதி  நடைபெறும்

5 டிசம்பர் 2023, 7:53 AM
பந்திங் தொகுதியின் தீபாவளி பொது உபசரிப்பு டிசம்பர் 10ஆம் தேதி  நடைபெறும்

ஷா ஆலம், டிச 5 - பந்திங்  சட்டமன்றத் தொகுதியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு வரும் டிசம்பர் 10ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்த உபசரிப்பு பந்திங்கில் உள்ள தொகுதி சேவை மையத்தில்  பிற்பகல் 1.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும். விருந்துடன் கூடிய இந்த உபசரிப்பில் அதிர்ஷ்டக் குலுக்கில்  கவர்ச்சிகரமான பரிசுகளைப் பெறுவதற்குரிய வாய்ப்பினையும் வருகையாளர்கள் பெறுவர்.

இந்த திறந்த இல்ல உபசரிப்பில் தொகுதி மக்கள் திரளாகக் கலந்து சிறப்பிக்குமாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான வீ. பாப்பாராய்டு கேட்டுக் கொள்கிறார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.