SELANGOR

கிள்ளான் நாடாளுமன்ற, பண்டமாரான் சட்டமன்றத் தொகுதிகளின் தீபாவளி உபசரிப்பில் 500 பேர் பங்கேற்பு

4 டிசம்பர் 2023, 9:39 AM
கிள்ளான் நாடாளுமன்ற, பண்டமாரான் சட்டமன்றத் தொகுதிகளின் தீபாவளி உபசரிப்பில் 500 பேர் பங்கேற்பு

கிள்ளான், டிச 4 - கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் பண்டமாரான்

சட்டமன்றத் தொகுதிகள் இணைந்து தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை

நேற்று சிறப்பாக நடத்தின.

பண்டமாரான் விளையாட்டு அரங்கில் இரவு 7.00 மணி தொடங்கி

நடைபெற்ற இந்த உபசரிப்பில் கிள்ளான் தொகுதி நாடாளுமன்ற

உறுப்பினர் வீ. கணபதிராவ் மற்றும் பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினர்

டோனி லியோங் ஆகியோர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த பொது உபசரிப்பில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும்

பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான வீ.பாப்பாராய்டு, நகராண்மைக் கழக

உறுப்பினர்களான யுகராஜா, குமணன், ஜேக்கி, ஷரோன் சியா, திருமதி

கண்மணி மற்றும் இந்திய சமூகத் தலைவர்கள் சிறப்பு

வருகையாளர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்த பொது உபசரிப்பு நிகழ்வில் தொகுதியைச் சேர்ந்த மூவினங்களையும்

சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த பொது

உபசரிப்பை நிகழ்வுக்கு வருகை புரிந்த அனைத்து பொது மக்களுக்கும்

நாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கணபதிராவ் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.