ஷா ஆலம், டிச 4: ``பாயார் பாலேக்` மற்றும் ``மெனாங் ஹிஜ்ரா சிலாங்கூர் 2023`` பிரச்சார திட்டத்தில் யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா சிலாங்கூர்) RM20,000க்கும் மேல் பரிசுகளை வழங்குகிறது.
ஜனவரி 1 முதல் டிசம்பர் 18 வரை நடத்தப்படும் இப்பிரச்சாரம் அனைத்து ஹிஜ்ரா சிலாங்கூர் தொழில் முனைவோருக்கும் திறந்திருக்கும்.
"2023ஆம் ஆண்டின் இறுதியில் இந்த பிரச்சாரத்தில் பெயர்கள் பரிந்துரைக்கப் படுவதை உறுதிசெய்ய, தொழில் முனைவோர் நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின்படி பணத்தைத் திருப்பச் செலுத்துவதை உறுதிசெய்யவும்" என்று ஹிஜ்ரா சிலாங்கூர் முகநூல் மூலம் தெரிவித்துள்ளது.
குலுக்கல் இரண்டு பிரிவுகளில் நடத்தப்படுகிறது, அதாவது RM30,000 மற்றும் அதற்கும் குறைவான நிதிக்கான வகை 1 மற்றும் RM31,000 மற்றும் அதற்கு மேல் நிதிக்கான வகை 2 ஆகும்
பிரிவுகள் 1 மற்றும் 2யில் RM20,000 க்கும் அதிகமான பரிசை வெல்ல வாய்ப்பு உள்ளது.
"பிரச்சாரத்திற்கான குலுக்கல் டிசம்பர் 27 ஆம் தேதி பிரிவு 1க்கும், டிசம்பர் 28 ஆம் தேதி பிரிவு 2க்கும் ஹிஜ்ரா சிலாங்கூரின் முகநூல் மற்றும் யூடியூப்பில் நேரடி ஒளிபரப்பு மூலம் நடத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.




