SELANGOR

விவசாயிகளின் போக்குவரத்துக்கு வசதியாகக் கான்கிரீட் பாலம் கட்டப்படும்

4 டிசம்பர் 2023, 4:01 AM
விவசாயிகளின் போக்குவரத்துக்கு வசதியாகக் கான்கிரீட் பாலம் கட்டப்படும்

ஷா ஆலம், டிச.4: அடுத்த ஆண்டு கம்போங் சுங்கை சமாக், ரவாங்கில் விவசாயிகளின் போக்குவரத்துக்கு வசதியாகக் கான்கிரீட் பாலம் கட்டப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமையன்று பெய்த கனமழையால் இடிந்து விழுந்த 30 மீட்டர் நீளமுள்ள மரப்பாலத்திற்குப் பதிலாக RM100,000 மதிப்பீட்டில் கான்கிரீட் பாலம் கட்டப்படும் என சுவா வெய் கியாட் தெரிவித்தார்.

“அங்கு பெய்த கனமழையால் ஆறு பெருக்கெடுத்து ஓடியது மற்றும் எட்டு ஆண்டுகளுக்கு முன் தோட்டக்காரர்கள் கட்டிய பாலம் இடிந்து விழுந்தது.இதனால் தோட்டக்காரர்கள் பிரதான பாதையில் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

"அடுத்த ஆண்டு வலுவான கட்டமைப்புடன் பாலம் கட்டுவதற்கான ஒதுக்கீட்டை வழங்க மாவட்ட மற்றும் நில அலுவலகத்திற்குக் (பிடிடி) கோரிக்கை விடுத்துள்ளேன். விண்ணப்பம் ஏற்றுகொள்ளப்பட்டு அளவீட்டு செயல்முறை முடிந்தவுடன் மேம்பாட்டு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் ," என்று அவர் சிலாங்கோர்கினியிடம் கூறினார்.

மேம்பாட்டு பணி தொடங்கும் போது, விவசாயிகள் நிலங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்வதற்கு மேலும் தொலைவில் உள்ள மாற்று வழிகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், தற்போது சுமார் 70 மலாய்க்காரர் குடும்பங்கள் வசிக்கும்  அப்பகுதியில் ஒரு பாரம்பரிய கிராமத்தை உருவாக்க வெய் கியாட் திட்டமிட்டுள்ளார்.

"கிராமம் ஏற்கனவே உள்ளது, ஆனால் கிராமத் தலைவர் இல்லை, உள்கட்டமைப்பு திருப்திகரமாக இல்லை, மேலும் அவை மேம்படுத்தப்பட வேண்டும்,`` என்று அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.