SELANGOR

தொழிலை விரிவுபடுத்த விரும்பும் தொழில்முனைவோருக்கு RM50,000 வரை நிதியுதவி - ஹிஜ்ரா சிலாங்கூர்

4 டிசம்பர் 2023, 3:56 AM
தொழிலை விரிவுபடுத்த விரும்பும் தொழில்முனைவோருக்கு RM50,000 வரை நிதியுதவி - ஹிஜ்ரா சிலாங்கூர்

ஷா ஆலம், டிச 4: யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா சிலாங்கூர்) தொழிலை விரிவுபடுத்த விரும்பும் தொழில்முனைவோருக்கு RM50,000 வரை நிதியுதவி வழங்குகிறது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் விண்ணப்ப ஆவணங்களுடன் எளிதாகவும், வேகமாகவும் உதவி பெற ஐ-பிசினஸ் திட்டம் உதவுகிறது.

"இந்த ஐ-பிசினஸ் திட்டத்தின் நிதியுதவி அனைத்து வணிகத் துறைகளுக்கும் திறந்திருக்கும். மேலும் தகவலுக்கு www.hijrahselangor.com ஐப் பார்வையிடவும்" என்று ஹிஜ்ரா சிலாங்கூர் முகநூல் மூலம் தெரிவித்துள்ளது.

http://mikrokredit.selangor.gov.my/ என்ற இணைப்பின் மூலம் இணையம் வழி விண்ணப்பிக்கலாம்.

ஐ-பிசினஸ் திட்ட நிதியுதவிக்கான தகுதிகள்:

மலேசிய குடிமக்கள்

சிலாங்கூரில் வசிப்பவர்கள் அல்லது குடியிருப்பாளர்கள்

 சிலாங்கூரில் வாக்களிப்பை கொண்டவர்கள்

18 முதல் 65 வயது வரை உள்ளவர்கள்

வணிகம் ஏற்கனவே இயங்கி வருகிறது

செல்லுபடியாகும் வணிக உரிமம் அல்லது அனுமதி வேண்டும்

சிலாங்கூர் பட்ஜெட் 2023 யில் ஹிஜ்ரா திட்டத்தை மேம்படுத்தவும், தொழில் முனைவோர் வளர்ச்சிக்கு உதவவும் RM130 மில்லியன் ஒதுக்கப்பட்டது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.