SELANGOR

செலாயாங் நாடாளுமன்ற, தாமான் டெம்ப்ளர் சட்டமன்றத் தொகுதிகளின் தீபாவளி பொது உபசரிப்பு

4 டிசம்பர் 2023, 3:51 AM
செலாயாங் நாடாளுமன்ற, தாமான் டெம்ப்ளர் சட்டமன்றத் தொகுதிகளின் தீபாவளி பொது உபசரிப்பு

செலாயாங், டிச 4 - செலாயாங் நாடாளுமன்ற மற்றும் தாமான் டெம்ப்ளர்

சட்மன்றத் தொகுதிகளின் தீபாவளி பொது உபசரிப்பு நேற்று இங்கு வெகு

சிறப்பாக நடைபெற்றது.

செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் ஜீன் கீன்

மற்றும் தாமான் டெம்ப்ளர் சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு

உறுப்பினருமான அன்ஃபால் ஷாரி ஆகியோரின் ஏற்பாட்டிலான் இந்த

பொது உபசரிப்பில் மூவினங்களையும் சேர்ந்த மக்கள் திரளாகக் கலந்து

கொண்டனர்.

இந்த நிகழ்வில் வறுமை ஒழிப்புத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு

உறுப்பினர் வீ.பாப்பாராய்டு சார்பில் செலாயாங் தொகுதி ஜசெக

தலைவரும் ஆட்சிக்குழு உறுப்பினரின் சிறப்பு அதிகாரியுமான செகு

ஆனந்த் செலாயாங் நகராண்மைக் கழக உறுப்பினர்கள், இந்திய சமூகத்

தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

விருந்து உபசரிப்புடன் கூடிய இந்த திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வில்

பல்வேறு கலாசார நடனங்களும் இடம் பெற்றன.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி, இந்த

பொது உபசரிப்பு நிகழ்வை மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த

விழா ஏற்பாட்டுக் குழுவினருக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.