SELANGOR

கம்போங் துங்கு சட்டமன்றத் தொகுதியின் தீபாவளி பொது உபசரிப்பு

1 டிசம்பர் 2023, 12:47 PM
கம்போங் துங்கு சட்டமன்றத் தொகுதியின் தீபாவளி பொது உபசரிப்பு

ஷா ஆலம், டிச 1- கம்போங் துங்கு  சட்டமன்றத் தொகுதியின் ஏற்பாட்டில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு பெட்டாலிங் ஜெயா தாமான் அமான் கூடைப்பந்து மைதானத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.

பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் 19வது பிரிவின் ஆதரவுடன் நடத்தப்பட்ட  இந்த உபசரிப்பில் டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ, பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற இடைக்கால டத்தோ பண்டார்  ஹஸ்னான் ஹாஜி ஹசான், சுங்கைவே காவல் நிலையத் தலைவர் ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்த பொது உபசரிப்பு நிகழ்வை கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் யீ வேய் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் அவர் இந்திய பாரம்பரியப்படி சேலை அணிந்திருந்தது வருகையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.

இந்த பொது உபசரிப்பு நிகழ்வில்  பாரம்பரிய அல்லது தேசிய உடைக்கானப் போட்டி, அதிர்ஷ்டக் குலுக்கு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இந்த விருந்து நிகழ்வில் மூவினங்களையும் சேர்ந்த மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.